பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் மணங் கமழாத கல்வி சிறந்த பயனுடையதாகாது. "கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகே னாயிடினும்" என்ற பெரியார் திருமொழியும் கல்வியின் பயன் கட வுளை அறிந்து நினைந்து வழிபடச் செய்தலேயாம் என்று அறிவுறுக்கும். கடவுளியல் முதலியனவும், வழிபடு முறை முதலியனவும் சமய நூல்களைப் பயின்ரு லொழியத் தெரியா, எல்லாம்வல்ல இறைவன், கற் றவர் விழுங்குங் கற்பகக் கனி" யாதலின், அக் கனியின் இயல்பு அறிதற்குரிய வழியைக் கல்வியின் தொடக்க முதல் மேற்கோடலே நன்றாம். இக்குறிப்பை நம் தமிழ் மூதாட்டியாகிய ஒளவையார் சிற்றுருவிற் பெரும்பொருள் பொதுள் அருளிய ஆத்திசூடி, கொன்றைவேய்ந்தோன் முதலிய நூல்கள் நன்கு வலி யுறுத்துவனவாம். மக்கட்குரிய பொது வொழுக்கங் களையும் சமயம் பற்றிய சிறப்பொழுக்கங்களையும் ஒரு வன ஒருங்கு எய்துதற்குரிய வழி சமயநூற் பயிற்சி யானேயாம். ஆதலின், நம் சிறார் பயிலுதற்குரிய பாடங்களுள் சமயக் கொள்கைகளைப் பற்றிய பாடமும் ஒன்றாம்படி செய்தல், தமிழ்க் கல்லூரிகளை நடாத்தும் தலைவர்களால் மேற்கொள்ளத் தக்கதொன்றாம். 6. கரந்தைத் தமிழ்ச் சங்கம் இனி, இக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைப்பற்றிச் சில கூறவேண்டுவது என் கடமையாகவுள்ளது. இச் சங்கம் இறைவன் அடிசேர்ந்த திரு.வே. இராதா கிருட்டின பிள்ளை B. A., அவர்கள் தம் நல்லுள்ளத் திற் பதித்த செழுமை மிக்க வித்தினின்றுங் கிளைத் தெழுந்ததாகும். தூய்மை மிக்கா ருள்ளத்தினின்றும்