பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மாணிக்க வாசகர் லீடுபட்டு ஒழுகிய தாயுமான அடிகள், 'என்புருகி நெஞ்சம் இளகிக்கரைந்து கரைந்து, அன்புருவாய் நிற்க அலைந்தேன் பராபரமே' என்று கூறியதற்கு இலக்கிய மாகவுள்ளவர் மாணிக்கவாசக அடிகளே. இவர்கள் அன்பு நறியை வியந்தே,'வாதவூர் ஐயன் அன்பை வாஞ்சிப்ப தெந்நாளோ' என்றுங் கூறினர். படிப்பவர் கேட்பவர் உள்ளங்களைக் கனிவிக்கும் கவிமழை பொழிந்த சமீப காலத்துக் கவிஞர் தலைமணியாகிய இராமலிங்க அடிகள், திருவாசகத்தைப் பன்முறை யோதியுணர்ந்து பயின்றவர் என்பது அவர் அநுபவட் பாடல்களால் அறியலாம். ஒரு சிறந்த கவியினுள் ளத்தை மற்றொரு கவிதான் உணரமுடியும். அந்நிலை யில், திருவாசகப் பாடல்களில் உள்ளந் தோய்ந்து பொருள் நயங்களில் ஈடுபட்ட இராமலிங்க அடிகள், "வான் கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்களித்தீஞ் சுவைகலந்து ஊன்கலந்து உயிரீகலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்று கூறினர். 'நான் கலந்து பாடுங்கால்' என்றது நினைக்கத் தக்கது. ஒரு பெரியார் பாடலைப் படிப்ப வர்கள் உள்ளமும, அப்பாடற் பொருளும் அத்துவித நிலையடைதல் வேண்டும். அங்ஙனம் ஒன்றுபடுதலையே 'நான் கலந்து பாடுங்கால்' என்றனர். திருவாசகச் சுவை 'ஊன்கலந்து உயிர்கலந்து இனிப்பது' என்றார். உயிரிற் கலந்து தன்வயமாக்குங் கனிவு திருவாசகத் துக்குச் சிறப்பியல்பாகும். தேன், பால் முதலிய உவ மைகளானன்றித் திருவாசகச் சுவையி னியல்பை உள்ளபடி கூறுக என்பார்க்கு விடையாக,