பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கேரவை பதிகரணமாக மாறப் பெற்ற தம் உள்ளத்தால் அறுதி யிட்டு தெள்ளமுத உரைகளால் அறிவிற் சிறியாரும் உணர்ந்து இன்புறும் வண்ணம் இசையினிமை மிக்க பாடல் வடிவில் வெளிப்படுத்திய முறை மிகவும் பாராட்டற்குரியது. அம்மானை, பொற் சுண்ண மிடித்தல், உந்தி, சாழல், தெள்ளேண்ம்.ஊசல் முதலிய மகளிர் விளையாடல்களில், அவர் தம்முள் உண்மைகளை மக்கள்பால் உரையாடு முகமாக, அரிய அநுபவ எளிய முறையில் தெளிவுபடுத்தியது, அடிகள் ஏனைய வைத்த பெருங் கருணைக்குப் பெரிது சான்றாவதாம். குயிலை முன்னிலைப்படுத்தி இறைவன் அருட்குணங்களை இங்ஙனம் கூவுக எனவும், வண்டு களை நோக்கி இங்ஙனம் ஊதுக எனவும் அருளிச் செய்த திருப்பாடல்களை நோக்குங்கால், ஓசை யொலி யெல்லாம் சிவமயமாகக் கண்டார் என்பது புலனாம். 82 தாம் அநுபவித்த பொருள்களின் வரையறையும், தெளிவும், குழைந்த அன்பின் கனிவும் ததும்ப இடை யறாது ஒழுகும் தேனருவி போன்ற ஒழுக்கமிக்க இவர்கள் பாடல்களின் இயல்பை நம்மனோர் எங் ஙனம் எடுத்துரைக்க இயலும்! ஆயினும் இவற்றிற் கெல்லாம் எடுத்துக் காட்டாக, சிறிய வடிவிலமைந்த ஒரு திருப்பாடலைக் குறிப்பிடலாம் என்று எண்ணுகின் றேன். அஃதாவது, "இன்பம் பெருககி யிருளகற்றி யெஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியாய்--அன்பமைத்துச் சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டா னுவந்து"