பக்கம்:உலகு உய்ய.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

லாம். பின்னர்ப் பெரிய வேலை கிடைத்ததும் அதற்கு மாறலாம். சிறிய தொழிலையே கூட வளர்த்து நாளடை வில் பெரிய தொழிலாக மாற்றலாம். எனவே, அனை வரும் பயனுள்ள எந்த வேலையாயினும் செய்து கொண்டே யிருக்க வேண்டும்.

(5) போர்க் கருவிகள் செய்தல் போன்ற அழிவு வேலைகளில் ஈடுபடாமலும், ஆடம்பரப் பொருள்களையும் வீண்பொழுது போக்குக் கருவிகளையும் செய்வதைக் குறைத்தும் பயனுள்ள ஆக்கவேலைகளையே அனைவரும் செய்யவேண்டும்.

(6) கடவுள் பெயரால் ஏமாற்றுதல், கையூட்டு பெறு தல், கள்ளக் கணக்கு - கலப்படம் - கள்ளவாணிகம்-களவு செய்தல் முதலிய தீய வழிகளில் பொருள் ஈட்டுதலை அறவே ஒழிக்கவேண்டும். ஊழல் இல்லாத - ஒழுங்குமுறை உள்ள உலகத்தை உருவாக்க வேண்டும்: களவுத் துறை யில் ஈடுபட்டவருக்கும் கொடுந் தொழில் புரிபவர்க்கும், கொலைத் தண்டனையும் கைகால் குறைப்புத் தண்டனை யும் கொடுக்க வேண்டும் எனத் திருக்குறள், சிலப்பதி காரம், நாலடியார் முதலிய நூல்கள் கூறுகின்றன.

'கொலையின் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்’ (திருக்குறள் - 549)

"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று

வெள் வேல் கொற்றங் காண்.”

(சிலப்பதிகாரம் - வழக்குரை காதை:- 94-95)

'அச்சம் பெரிதால், அதற் கின்பம் சிற்றளவால்,

நிச்சம் நினையுங்கால் கோக் கொலையால்.”

(நாலடியார் - 81)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/100&oldid=544757" இலிருந்து மீள்விக்கப்பட்டது