பக்கம்:உலகு உய்ய.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

“காணின் குடிப்பழியாம், கையுறின் கால் குறையும்

ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்”.

(நாலடியார் - 84)

முதலிய இலக்கியங்களைக் காணின் உண்மை விளங்கும்.

மன்பதையின் தோல்வி:

"தனி ஒருவனுக்கு உணவு இல்லை யெனில் சகத்தினை (உலகத்தையே) அழித்திடுவோம்’ என்று சுப்பிரமணிய பாரதியாரும், இரந்தும் (யாசித்தும்) உயிர் வாழ்தல் வேண்டின் உலகியற்றியான் (கடவுள்) பரந்து கெடுக’ எனத் திருவள்ளுவரும் கனல் தெறிக்கக் கூறியுள்ள கருத் துக்களை மீண்டும் கவனிக்க வேண்டும். இவர்தம் கூற் றின் பிழிவான சாரமாவது: உலகில் ஒருவனுக்கு உணவு இல்லை யென்றாலும், அந்தநிலை, அவன் வசிக்கும் நாட் டுக்கு மட்டும் தோல்வியாகாது; அந்தநிலை உலக மன் பதை (சமுதாயம்) முழுவதின் தோல்வியே யாகும் - என் பது அவர்தம் பாடல்களின் சாரமாகும். உலக மக்களினம் இதை உணர வேண்டுமே!

வளத்திற் கிடையே வறுமை:

உலகில் வளங்கள் நிரம்ப உள்ளன. அங்ங்ன மிருந்தும் வளத்திற்கிடையே வறுமை காணப்படுகிறது. இனியும் இதற்கு இடம் தரலாகாது. அறிவியல் அறிஞர்கள், தம் ‘ஆராய்வு (curiosity) ஊக்கத்தைப் பயன்படுத்தி உலகி லுள்ள வளங்களைக் கண்டுபிடித்து வெளிக் கொணர வேண்டும்; பல தொழில் துறைகட்குரிய வாய்ப்புக்களை ஆராய்ந்து வகுத்துத் தரவேண்டும். அரசினரும் மக்களும், "படைப்பு’ (Construction) ஊக்கத்தைப் பயன்படுத்தி, மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/101&oldid=544758" இலிருந்து மீள்விக்கப்பட்டது