பக்கம்:உலகு உய்ய.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

யில்லாத பிறவிகள்; கொடுத்து வைத்த பிறவிகள், இப் பிறவிகட்கு உரிய இடம் கல்லறையே யாகும்.

எனவேதான், நெடுநீர் (காலம் தாழ்த்தல்), மறவி (மறதி), மடி (சோம்பல்), துயில் (பெருந்துக்கம்) ஆகிய நான்கும் கெட்டழியும் இயல்பினர் காமுற்று அணியும் அணி கலன்களாகும் எனத் திருவள்ளுவர் தெரிவித்துள்

6ТІГІТ:

"நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்’’. (605)

என்பது அவரது திருக்குறள் பாடல். சோம்பித்திரியேல்," ‘வைகறைத் துயில் எழு’ என்னும் ஒளவையின் அறிவுரை களைச் சிறுவயதில் முதல் வகுப்பிலேயே புகட்டியுங் கூட மக்கள் திருந்துவதாயில்லை. செம்மறி யாடு படுக்கும் முன்னிரவு)நேரத்தில் படு-வானம்பாடி எழும் (வைகறை) (நேரத்தில் எழுந்துவிடு, என்னும் பொருள் பொதிந்துள்ள “Lie with the lamb and rise with the lark” argårgyth ஆங்கிலப் பழமொழி ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. மற் றும், சிறிய காலத் தாழ்ப்பு பெருங் கேட்டை விளைவிக் Gilb’ argårg)|lb 5(5551601–u “A small neglect breeds great mischief என்னும் ஆங்கிலப் பழமொழியும் எண் னத் தக்கது பருவத்தே பயிர் செய், என்பது ஒளவை யின் அறிவுரை. இதனை உழவுத் தொழிலுக்கு மட்டு மன்றி மற்ற தொழில்கட்கும் கொள்ளலாம். கருமமே கண்:

ஆக்க வேலையில் ஈடுபட்டிருப்பவர் அதிலேயே கண் ணாயிருக்கவேண்டும்; மெய் வருத்தம் பார்த்தலாகாது; பசியையும் பொருட் படுத்தக் கூடாது; நெடுநேரம் கண் உறங்கலாகாது; எவர் செய்யும் இடையூற்றையும் ஏறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/108&oldid=544764" இலிருந்து மீள்விக்கப்பட்டது