பக்கம்:உலகு உய்ய.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

ஒரு காலைத் தானே விட்டுக் கொண்டவனாவான் என்று ஒர் அறிஞர் கூறியுள்ளார்.

இது சார்பாக வள்ளுவர் கூறியுள்ள சில கருத்துக் களைக் காண்போம்: இந்தச் செயல் செய்வதற்கு அரியது என அஞ்சிச் சோராமல் முயன்று செய்யின் வெற்றி கிடைக்கும். எண்ணுவதெல்லாம் உயர்வாகவே எண்ண வேண்டும்; அந்த உயர் எண்ணம் கைகூடாமல் தவறி னாலும், தவறாத தன்மையதாகவே பொருள்படும். காட்டு முயலை அம்பு எய்து பெறும் வெற்றியினும், யானையைக் கொல்ல வேல் எறிந்து அது கிடைக்காமல் தவறிப் போன தோல்வி சிறப்புடைத்து. இச்செய்திகளை,

'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்’ (611) “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து’ (596)

'கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது’. (722)

என்னும் திருக்குறள் பாடல்களால் அறியலாம்.

கஜனி மாமூது என்னும் ஆப்கானியத்தான மன்னர் இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்தபின் வெற்றி பெற்றாராம். ராபர்ட் புரூஸ் (Robert Bruce) என் னும் மன்னன் நாடிழந்து ஒரு குகைக்குள் மறைந்திருந் தானாம். தன்னாட்டை மீட்கப் பல முறை முயன்றும் பயனில்லை. இந்நிலையில், குகைக்குள்ளே ஒரு சிலந்தி ஆறு முறை வலை கட்டியும் கை கூடாமற் போக, அது சோராமல் முயன்று ஏழாவது தடவை கட்டி முடித்த தைக் கண்டு, அரசன் ஊக்கம் கொண்டு, மீண்டும் படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/110&oldid=544766" இலிருந்து மீள்விக்கப்பட்டது