பக்கம்:உலகு உய்ய.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111

ஆய்ந்தோய்ந்து பாராதவன் தான் சாவ மருந்து உண் பான், என்பது தமிழ்ப் பழமொழி ஒரு செயலில் குதிக்கு முன்பு நன்கு ஆராய்ந்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ arsir@yib 5G5 #glowl-u “Look before you leap” arsir@ith ஆங்கிலப் பழமொழி ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

வேலையில் வேற்றுமையா?

வேலையில் உயர்வு தாழ்வு என்னும் வேற்றுமை பாராட்டலாகாது. எந்தத் தொழில் யாருக்கு வாய்க் கிறதோ அந்தத் தொழில் எத்தகையதாயினும் அதை அவர் கூசாது செய்ய வேண்டும். ஊதியத்தைக் கொண்டு வேலை சிறியது எனத் தோன்றின், பெரிய ஊதிய வேலைக்கு முயலலாம்; அந்த நோக்கத்திற்குக் கல்வியை மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் - அல்லது-மேலும் சிறந்த தொழிற் பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு முயன்று பெரிய ஊதிய வேலைக்குப் போகலாம். ஆனால், தொடக்கத்தில் கிடைக்கும் தொழில் குறைந்த ஊதியத் தொழிலாக இருக்கிறது என்று சோர்ந்து மனக் குறை யுடன் செய்வதோ - அல்லது - அந்தத் தொழிலை ஏற்றுக் கொள்ளாமல் கை நழுவ விடுவதோ கூடாது. சிறிய தொழில் என்று வாளா இருந்தால் ஊதியம் வருமா? உழைப்பு இல்லையேல் ஊதியம் இல்லை. (No pains - No gains). பெரிய தொழிலை எதிர்பார்த்துச் சிறிய தொழிலைக் கைவிடலாகாது. நாளைக்கு வரும் பலாப் பழத்தினும் இன்றைக்குக் கையில் இருக்கும் களாப் பழம் மேலானது. 'புதரில் இருக்கும் இரண்டு பறவைகளினும் கையில் இருக்கும் ஒரு பறவை மிகுந்த பெறுமானம் a gol–ugi” argörgjih 5G5 #glamu – u “A bird in the hand is worth two in the bush” GrGirgguth -ạgiãI9avulì LIự QuorTg) ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/112&oldid=544768" இலிருந்து மீள்விக்கப்பட்டது