பக்கம்:உலகு உய்ய.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

செலவு செய்வது தன்னையே அழித்துக் கொள்வதாகும். வருவாய் குறைவாயிருப்பினும் செலவு அதற்குமேல் போகா திருப்பின் தாழ்வு ஒன்றும் இல்லை. அளவறிந்து வாழாதவன் வாழ்க்கை முதலில் ஆரவாரமாய்த் தோன்றிப் பின் அறவே கெட்டழியும் என வள்ளுவர் கூறுகிறார்.

“ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

போகாறு அகலாக் கடை” (478)

'அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்’ (479)

என்பன அவர்தம் திருக்குறள் பாடல்கள். ஈண்டு, கடன் பட்டவன் துன்பப்படுவான்’ என்னும் கருத்துடைய 'He that goes a - borrowing goes a - sorrowing” GTGigyub ஆங்கிலப் பழ மொழியும், ஒரு காசு மிச்சம் செய்தால் ஒரு காசு ஈட்டியதாகும்’ என்னும் கருத்துடைய 'A penny saved is a penny gained” arcăgyth oft@a ygyuan மொழியும், சட்டை தைப்பதற்குத் துணிக்கு ஏற்ப வெட்டு’ «Tairgylb 5(535.67 as “Cut your coat according to cloth.” என்னும் ஆங்கில முது மொழியும் ஒப்புநோக்கற்பாலன. ஆடம்பரம் இன்றி எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழின், சிறு சிறு மிச்சம் சேர்ந்து பெருந்தொகையாகும். ‘G0 g/of QL (BGauginotub" - "Drops of water make an ocean' - assirust பழமொழிகளாகும். எனவே, ஆக்க வேலையில் ஈடுபட்டால் மட்டும் போதாது; எளிமை யையும் சிக்கனத்தையும் இளைஞர் - முதியோர், ஆடவர் -மகளிர் அனைவரும் கடைப் பிடிக்க வேண்டும். இல்லை யேல் வேலை செய்தும் கடனாளியாக வேண்டிவரும்.

வேண்டாத வேலைகள்:

செய்ய வேண்டிய ஆக்க வேலைகள் இருக்க, செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/115&oldid=544771" இலிருந்து மீள்விக்கப்பட்டது