பக்கம்:உலகு உய்ய.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

வேண்டாத வீண் வேலைகள் பலவற்றை மக்கள் செய்து கொண்டுள்ளனர். அவற்றுள் சில காண்போம்:

1. கடவுள்-மதம்-கோயில்-என்ற பெயரால் செய்யப் படும் வேலைகள், காலம்-முயற்சி-பொருள் அத்தனையை யும் பாழடிக்கின்றன. கடவுள் வழிபாடு கட்டாயம் உள்ளத்தில் இருக்க வேண்டும்.

2. முகப்பூச்சு (Face Powder), உதட்டுச் சாயம் (Lip Stick), சாந்துகள், இன்ன பிற ஒப்பனைப் பொருள் களை உண்டாக்குதல் மிகவும் இன்றியமையாததா? பொருள் போவதின்றி, சில பைத்தியங்கள் ஒப்பனை செய்துகொள்வதில் நெடுநேரம் செலவிடுகின்றன. பொரு ளாக்கத்துக்குப் பயன்படுவதால் இரும்புக்கே மதிப்பளிக்க வேண்டிய இக்காலத்தில், ஒன்பான் மணிகளால் (நவரத் தினங்களால்) ஆய அணிகலன்கள் தேவைதானா? பொன், வெள்ளி போன்றவை மருத்துவத்துறைக்குப் பயன்படுவது தவிர வேறு எதற்குத் தேவை? தங்கத்தை அடிப்படை யாகக் கொண்டு உலகப் பொருளாதாரம் அமைவதாக நடைமுறையில் இருக்கும் நிலை மறு ஆய்வுக்கு உரிய தாகும். இரும்பைவிட தண்ணிர் இன்றியமையாதது; ஆனால் இரும்பினும் தண்ணீர் எளிதாகவும் மிகுதியாகவும் விலை குறைவாகவும் கிடைப்பதால், இரும்பினும் தண்ணிர் எளிமையாய் மதிக்கப்படுகிறது. இது போலவே, பொன், வெள்ளி, மற்றும் ஒன்பான் மணிகள் முதலியவற்றினும், இரும்பு இன்றியமையாதது; ஆனால், மற்ற வற்றினும் இரும்பு மிகுதியாகக் கிடைப்பதால், இரும்பு மற்ற மணி களினும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மை இஃதன்று; இரும்பே இன்றியமையாதது. எனவே, இரும்பை மிகுதியாக உண்டாக்குவதே பெரிய ஆக்கவேலை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/116&oldid=544772" இலிருந்து மீள்விக்கப்பட்டது