பக்கம்:உலகு உய்ய.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

3. வெடிகள், வாணங்கள் முதலியவற்றை உண் டாக்குவதும் பயன்படுத்துவதும் நூற்றக்கு நூறு அழிவே தவிர ஆக்கமே யில்லை. உலக நாடுகள் போர்ப்படைக் கலங்களையும்-கருவிகளையும் மிகுதியாகப் படைத்து வைத்திருப்பதற்குத் தொடக்கத்தில் வித்திட்டவை இந்த வெடி-வாணங்களே யாகும். இவற்றின் பொல்லாமையை உணர்ந்து இவற்றைப் போக்கிவிட வேண்டும்.

4. கலை என்னும் பெயரால், நடனம் என்னும் கலை நடம் ஆடிக்கொண் டிருக்கிறது. ஒரு பெண்ணையோ, உடன் இரண்டொருவரைச் சேர்த்தோ, மூன்று மணி நேரம் ஆடவிட்டுப் பலர் பணம் கொடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நடனம் கற்றுக் கொண்ட பெண் எத்தனை ஆண்டுகள் நடனம் ஆடிக்கொண்டிருக்க முடி யும்? ஓரளவு வயது கடந்தபின் நடனம் ஆட முடியுமா? ஆடினாலும் பலரும் பணம்தந்து பார்ப்பார்களா? இசை, ஒவியம், தையல் முதலிய கலைகளைக் கற்றுக்கொண்டா லும் கிழவியாகும்வரை பயன்படுத்தலாம். நடனத்துக்கு ஒரளவே இடம் தரல்வேண்டும்.

5. இயல்தமிழ், இசைத்தமிழ், கூத்துத் தமிழ் எனத் தமிழை மூவகையாகக் கூறுவது மரபு. இந்த முக்கலை களும் பண்டு தமிழகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி பெற் றிருந்தன. இடைக்காலத்தில் தமிழகத்தில் சமணபெளத்த மதத்தினரின் செல்வாக்கு ஓங்கியபோது கூத்துத் தமிழ் குன்றலாயிற்று. நடனமும் அருவருப்பான நாட கங்கள் சிலவும் காம வெறியைத் தூண்டிச் சமூகத்தில் ஒழுக்கக் கேட்டை உண்டாக்கியதால், அந்தச் சமணபெளத்த ஆற்றல்கள் கூத்துத் தமிழைக் குலைத்து விட்டன. இந்த வரலாற்றுச் செய்தியைப் படிப்பினை யாகக் கொண்டு, நாடகங்களிலும் திரையோவியங்களிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/117&oldid=544773" இலிருந்து மீள்விக்கப்பட்டது