பக்கம்:உலகு உய்ய.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

அருவருக்கத்தக்க மட்டமான காமக் காட்சிகளைக் களைந்தெறிய மேண்டும். இல்லையேல், காமக் காட்சி களைக் காட்டும் நிறுவனங்கள் கலைக்கூடங்களாகக் கருதப்படாமல், காமத்தை உற்பத்தி செய்யும் காமத் தொழிற்கூடங்களாகவே கணிக்கப்படும்.

விளையாட்டு ஆக்க வேலையா?:

Lp6758)6ôr @LIT¿ILI GLITôG3@j6ir (General Tendencies) விளையாட்டும் ஒன்று என உளவியலார் (Psychologists) உரைக்கின்றனர். அன்று தொட்டு இன்றுவரைகுழந்தைகள் முதல் முதியோர்வரை, பல நோக்கங்களுடன் பலவகை விளையாட்டுகளை ஆடுகின்றனர். விளையாட் டின் நோக்கங்களாகப் பின்வருவனவற்றைக் கூறலாம்:

1. ஒய்வுக்காக விளையாடுவது: வேறு வேலை செய்து களைத்துப் போனவர்கள் ஒய்வுக்காக விளையாடு வர். சில வேலைகள் செய்யும்போது களைத்துப்போன சில உறுப்புக்கள் விளையாட்டின்போது ஒய்வு பெறுவதாகக் கூறுவதுண்டு.

2. பொழுதுபோக்குக்காக விளையாடுவது: வேலை யில்லாதவர்கள்-வேறு வேலை செய்யாதவர்கள், பொழு தைப்பிடித்துத் தள்ளுவதற்காக விளையாடுவது இது.

3. ஒய்வு நேரத்தை இன்பமான பொழுது போக்காக மாற்ற விளையாடுவது: இஃது, ஓய்வு நேரப் பொழுது Gut GF Gstsitsms (Recreation Theory) statt Gub,

4. புத்துணர்வு பெறவும் புதுத் தெம்பு பெறவும் விளையாடுவது (Refreshment Theory) ஒருவகை நோக்க மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/118&oldid=544774" இலிருந்து மீள்விக்கப்பட்டது