பக்கம்:உலகு உய்ய.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

9. விளையாட்டின் வாயிலாகச் சில உடல்நோய் களையோ மன நோய்களையோ தீர்த்துக் கொள்ளும்

மருத்துவநோக்கும் இதில் உண்டு.

10 பந்தயம் வைத்து விளையாடுவதும், போட்டிப் பரி சுக்காக விளையாடுவதுமாகிய பொருளியல் நோக்கும் சிலருக்கு உண்டு. இஃது அவ்வளவு சிறந்த தன்று. இந்த முறையில், தோல்வி ஏற்படின் சோர்ந்து துவள வேண்டி வரும்; எதிர் ஆட்டக்காரரின் மீது பகையும் காழ்ப்பும் சினமும் பொறாமையும் கொள்ள நேரிடும்.

11, தற்பெருமைக்காகவும் வீர உணர்வை வெளிக் காட்டுவதற்காகவும் விளையாடுவதும் உண்டு.

12. விளையாட்டு வாயிலாகச் செயல்களை எளிதாக வும் இன்ப மாகவும் செய்வதும் உண்டு. இது விளை யாட்டு முறை (Play way) எனப்பெறும். சிறார்கட்குக் கல்வி கற்பிக்க உளவியலார் இந்த விளையாட்டு முறை யைப் பெரிதும் பரிந்துரைத்துள்ளனர். விளையாட்டாகக் கல்வி கற்பிப்பதும் கற்பதும் எளிது. விளையாட்டாக வேலை வாங்குவதும் உண்டு. அவர் அதை ஒரு விளை யாட்டாகச் செய்து முடித்து விட்டார்’ என்று கூறும் உல கியல் வழக்காற்றைக் கேட்டிருக்கலாம். சில வேலை களைச் செய்பவர்கள் விளையாடிக் கொண்டும் பாடிக் கொண்டும் செய்வதைக் காணலாம். இதனால் வேலை ஒரு வேலையாகத் தெரியாமல் விளையாட்டாகவே எளி தாகவும் இன்பமாகவும் செய்யப்படும். ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது’ என்ற உலகியல் மொழி ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது.

இவ்வாறு விளையாட்டுகட்குப் பல நோக்கங்கள் கற் பிப்பது உண்டு. நல்ல நோக்கங்களுடன் விளையாடுவதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/120&oldid=544776" இலிருந்து மீள்விக்கப்பட்டது