பக்கம்:உலகு உய்ய.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

காழ்ப்பு-போட்டி பொறாமை-பொச்சரிப்பு-போர் முதலிய தீய விளைவுகளை உண்டாக்குவதால், இவை தேவை தானா என்பதை மக்களினம் மறு ஆய்வு செய்ய வேண் டும், குதிரைப் பந்தயமானது, பொது மக்களின் நல் வாழ்வைச் சூறையாடும் ஒருவகைச் சூதாட்டமே யாகும். இதற்கு அரசு உடன்பாடு தரலாமா? அச்சத்துடனும் திகிலுடனும் ஆடப்படுவதும் அச்சத்துடனும் திகிலுடனும் பார்க்கப்படுவது மாகிய சர்க்கஸ் போன்ற ஆட்டங்கள் வேண்டியவையா என்பதையும் அரசும் மக்களும் எண்ணிப் பார்க்கவேண்டும். வினையாட்டு வினையாகக் கூடாது' என்பது பழமொழி. (வினை = தீய விளைவு).

கிரிக்கெட் ஆட்டம்:

'கிரிக்கெட் (Cricket) ஆட்டம் முதல் முதலாக இங்கிலாந்தில் தோன்றியது. பின்னர், ஆங்கிலேயர்கள் கால்வைத்த இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் (west Indies) முதலிய நாடுகளிலும் பரவிற்று. கிரிக்’ (Cric) என்னும் சொல்லுக்குத் தடி-மட்டை என்பது பொருள். மட்டையால் மரப்பந்தை அடித்து ஆடும் ஒரு வகை ஆட்ட மாதலின் இது கிரிக்கெட் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்கின்றனர். இதில், பக்கத்துக்குப் பதி னொருவர் வீதம் நின்று ஆடுவர். இது, ஒரு மணி நேரத் திலோ அல்லது இரண்டு-மூன்று மணி நேரத்திலோ ஆடக் கூடிய தன்று; இதை ஆடக்குறைந்தது ஒரு நாள் முழுவது மாவது தேவைப்படும். இதன் தேர்வுப் போட்டிப் பந்த யம்’ (Test Match) ஐந்து நாட்கள் ஆடப் பெறும். ஒரு நாட்டிற்குள்ளேயே ஆடுவதன்றிப் பிற நாடுகட்குச் சென்று ஆடுவதும் உண்டு. ஒரு மணி நேரம்-அல்லது அரைநாள்-ஏறினது ஒருநாள் ஆகும் என்றாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/122&oldid=544778" இலிருந்து மீள்விக்கப்பட்டது