பக்கம்:உலகு உய்ய.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

பொறுத்துக்கொள்ளலாம். ஐந்து நாட்களாக-சில சமயங் களில் ஆறுநாட்களும் கூட ஆடும் இந்த ஆட்டத்தை ஏற் றுக்கொள்வது சரியாகாது. இதனால் யாது பயன்?

போட்டிப் பந்தயத்தைப் பல்லாயிரவர் காசு தந்து கட்டணச் சீட்டு (Ticket) வாங்கி ஐந்து நாட்கட்குப் பார்ப்பதுண்டு. இதனால் அனைவருக்கும் மிகுதியான காலமும் பொருளும் முயற்சியும் iணுவது கண்கூடு. இத னால்தான், ஆங்கிலேயராகிய பெர்னார்டு ஷா” என் பவரே இந்த ஆட்டத்தைப் பற்றி நையாண்டி செய் துள்ளார். (பக்கத்துக்குப்) ‘பதினொரு முட்டாள்கள் விளையாடுகின்றனர்; அதனைப் பதினோராயிரம் முட் டாள்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்-' (Eleven tools are playing and eleven thousand fools are watching” என்பது அவரது நையாண்டி உரை. பதினோராயிரவர் பார்த்துக்கொண்டிருப்பது மட்டு மன்று; இந்த ஆட்டத் தின் விளக்கவுரை (Commentary) Lov நாடுகளின் வானொலியின் வாயிலாகப் பரப்பப்படுதலின், பல நூறா யிரவர் இதனைக் கேட்டுக் காலத்தைப் பாழடிக்கின்றனர். இந்த ஆட்டத்தை நேரில் காண்பதற்காகக் கல்லூரி மாணுக்கர்பலரும்அலுவலக அலுவலாளர் பலரும்விடுமுறை எடுத்துக்கொள்வது மட்டும்வியப்பன்று;இந்த ஆட்டத்தின் விளக்கவுரையை வானொலியில் கேட்பதற் கென்றும் தொலைக்காட்சியில் (T.V.யில்)பார்ப்பதற்கு என்றும் மிக்க பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு காலத்தை வீணாக்கு வது மிகவும்வேடிக்கையாயிருக்கிறது. கேட்பதோடு நிற் கின்றார்களா?ஆட்டம் முடிந்த பின்னரும்-விளக்கவுரை முடிந்த பின்னரும், இதைப் பற்றி ஒருவர்க்கு ஒருவர் நெடு நேரம் பேசிக் காலத்தை வீணடிப்பது இன்னும் பெரியவேடிக்கை யாகும். கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர் என்று பிறர் நினைப்பது குறைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/123&oldid=544779" இலிருந்து மீள்விக்கப்பட்டது