பக்கம்:உலகு உய்ய.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

எனக்கருதி மற்றவர்களும் தெரிந்தவர்களைப் போல் நடிப்பதுண்டு.

ஆடுபவர்களைப் பற்றி மதிப்புரை சொல்வது இன் னும் மிகப் பெரிய வேடிக்கை யாகும். இவர் இத்தனை 'ஓட்டங்கள் (Runs) எடுத்தார்; இவர் இத்தனை 'விக் கெட்டுக்களை (Wickets) வீழ்த்தினார்; அவர் இத்தனை 'சிக்சர்’ (Sixer = ஆறு ஓட்டங்கள்) அடித்தார்; அவர் இத்தனை பவுண்டரி (Boundary = நான்கு ஒட்டங்கள்) அடித்தார்; இவர் இத்தனை நூறு (Century)= சதம்) எடுத்தார்; அவர் இத்தனை இரட்டை நூறு (இரட் டைச் சதம்) எடுத்தார். தேர்வுப் போட்டிப் பந்தயங்களில் இவர் இதுவரை இத்தனை ஆயிரம் ஒட்டங்கள் (Runs) எடுத்துச் சாதனை புரிந்துள்ளார்; அவர் அத்தனை ஆயி ரம் ஒட்டங்கள் (Runs) எடுத்து உலகிலேயே இதுவரை முதன்மையான உச்ச எல்லை (Record) பெற்றுள்ளார், இவர் இத்தனை முறை பந்து (Catch) பிடித்தார் என் றெல்லாம் ஆடுபவர்களைப் பற்றி மதிப்பீடு செய்து கூறு வது வழக்கம். -

பெர்னார்டுஷா கூறியுள்ளபடி இது பெரிய பைத்தியக் காரச் செயலாகத் தோன்ற வில்லையா? யார் எத்தனை ஒட்டங்கள் எடுத்தால் என்ன? யார் எத்தனை நூறுகள் (சதங்கள்) எடுத்தால் என்ன? காது அற்ற ஊசிக்கும் இதனால் பயன் உண்டா ? ஐந்து நாள்-ஆறு நாள் விளை யாடிக் காலத்தையும் காசையும் கொல்லும் இந்த விளை யாட்டு வேண்டியதுதானா? மக்கள் இனத்துக்கு இதனால் இழப்பே தவிர, நன்மையான நேர்ப்பயன் ஒன்றுமில்லை. இதற்கு இவ்வளவு விளம்பரம் கொடுப்பது வேண்டியதே யில்லை. பெருகிக்கொண்டிருக்கும் மக்களினத்துக்கு வேண் டிய அடிப்படைத் தேவைப் பொருள்களை ஆக்கவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/124&oldid=544780" இலிருந்து மீள்விக்கப்பட்டது