பக்கம்:உலகு உய்ய.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கொள்ளுதல், இன்ன பிற ஆக்கச் செயல்களிலும் ஈடுபட லாம். இங்கே, ஹென்றி வுட்டன்’ (Henry wotton) arsi gyth goal lawaif, “Character of a happy life” argir னும் தலைப்பில் பாடியுள்ள ஒரு பாடலின் பகுதி நினை வுக்கு வருகிறது:

“And entertains the harmless day

with a well – chosen book or friend”.

என்பது அந்தப் பாடல் பகுதி. தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒரு நல்ல நூலோடு அல்லது நல்ல நண்பர் ஒருவரோடு தீங்கற்ற பொழுதைக் கழிக்க வேண்டும் என இப்பாடற் பகுதி அறிவுறுத்துகிறது. திருவள்ளுவரும், இவ்வாறு, நல்ல வர்க்கும் நல்ல நூலுக்கும் ஒரு தொடர்பு செய்துள்ளார். பண்புடைய நல்லவரது தொடர்பு, படிக்கப் படிக்க - எடுத்துச் சொல்லச் சொல்ல நயம் பயக்கும் நூலைப் போலப் பழகப் பழக இனிக்கும் என்று கூறியுள்ளார்.

'நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.’ (783)

என்பது அவரது திருக்குறள் பாடல். கற்றறிந்தவர்கள் நல்ல கருத்துக்களைக் கலந்து பேசிப் பழகி மகிழ்வதனி னும் சிறந்த இன்பம் தேவர் உலகத்திலும் இல்லை என் னும் கருத்துடைய

'தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையார்

இகலிலர் எஃகுடையார் தம்முட் குழிஇ நகலின் இனிதாயிற் காண்பாம் அகல்வானத் தும்பர் உறைவார் பதி” (137)

என்னும் நாலடியார்ப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/127&oldid=544783" இலிருந்து மீள்விக்கப்பட்டது