பக்கம்:உலகு உய்ய.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

“Work while you work,

Play while you play”

என்னும் ஆங்கில மொழி அறிவுரையைக் கவனிக்க வேண் டும். இதையேதான், சுப்பிரமணிய பாரதியார்,

“காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு;

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா”.

என்னும் பாப்பா பாட்டின் வாயிலாகஅறிவுறுத்தியுள்ளார்.

படித்து அரசு அலுவல் பார்க்கும் பலர், விளையாட்டு களில் கழிக்கும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாயினும் பய னுள்ள சிறு சிறு வேலைகளில் கழிக்கலாம். ஆசிரியனாகிய யான், 1955 ஆம் ஆண்டுக் கோடை விடுமுறையில், புதுச் சேரி - விளையாட்டுத் திடல் ஒன்றில் பூப்பந்து (Badminton) ஆட்டம் நாடோறும் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது எங்கள் வீட்டில்-வீடு பழுது பார்க்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. பழுது பார்க்கும் கொத்தனார், யான் பந்து விளையாடிக் கொண்டிருப்பதை ஒருநாள் பார்த் தார். அவர் மறுநாள், வீட்டில் என்னை நோக்கி 'ஏன் வாத்தியார் ஐயா, பந்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்க மும் மாறி மாறி அடித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறீர்களே -இதனால் என்ன பயன்? வீண் முயற்சி தானே இது? என வினவினார். சரியான கேள்வி-கேட்க வேண்டிய கேள்வி. அவர் வினாவிற்கு என்னால் விடையளிக்க இயல வில்லை. எனவே, படித்தவர்கள் விளையாட்டுக்களில் கழிக்கும் நெடு நேரத்தில் சிறிதளவையாயினும் பயன் தரும் சிறு சிறு வேலைகளில் செலவிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/129&oldid=544785" இலிருந்து மீள்விக்கப்பட்டது