பக்கம்:உலகு உய்ய.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

படித்துப் பட்டம் பெற்று வேலையில் அமர்ந்திருக்கும் பலர், பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியேறியவுடன் படிப்பைப் பரண்மேல் தூக்கி வைத்தவர்களே யாவர். தொடர்ந்து ஒய்வு நேரத்தில் படிக்கும் பழக்கம் பலருக்கு இருப்பதில்லை. தாம் பட்டம் பெற்றதும், பல்கலைப் புலவர்களாகிவிட்டதாகக் கருதி, நூல்களைத் திரும்பிப் பார்ப்பதேயில்லை. என்ன அறியாமை! படித்தவர்கட்கு எல்லா நாடுகளும் தம் நாடுகள் போன்றன-எல்லா ஊர் களும் தம் ஊர்கள் போன்றன-எனவே, ஒவ்வொருவரும் சாகும் வரையும் படித்துக்கொண்டிராமைக்குக் காரணம் என்ன?-எனத் திருவள்ளுவர் வினவுகிறார்.

'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு’. (397)

என்பது அவரது திருக்குறள் பாடல். இங்கே வள்ளுவர் சாகும் வரை படிக்குமாறு பரிந்துரைத்திருப்பது, பள்ளி யில் சேர்ந்து பட்டம் பெறுவதற்காகப் படிக்கும் படிப்பை யன்று;சாகும் வரையும் ஒய்வு நேரங்களில் படிக்கவேண்டும் என்றே அவர் பரிந்துரைத்துள்ளார். எனவே, பல துறையி னரும் ஒய்வு நேரங்களில் படித்தலும் செய்ய வேண்டும். ஒரு திங்களுக்கு ஒரு புதிய முழு நூலையாயினும் படித்து முடிக்க வேண்டும். இதனால், சமுதாயத்தில் நற்பயிற்சி யும் நற்பயனும் பெருகும்.

இளைஞர்கள் சிலரும் தொழிலாளர்கள் சிலரும் நாடோறும் திரையோவியம் (சினிமா) பார்ப்பதும், ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை திரையோவியம் பார்ப் பதும் உண்டு. இன்னவர் நாள் முழுவதையுமே பொழுது

– 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/130&oldid=544786" இலிருந்து மீள்விக்கப்பட்டது