பக்கம்:உலகு உய்ய.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

றனர்-வேலை தருமாறு புரட்சி செய்கின்றனர். இதற்குக் காரணம் கல்வி முறையில் உள்ள குறைபாடேயாகும். அனைவருக்கும் அடிப்படைக் கல்வி தந்ததும், அனைவரை யும் ஒரே மாதிரியான பட்டப் படிப்புகட்கு அனுப்பாமல் முன் கூட்டியே பிரித்து விட வேண்டும். பல தொழில் துறைக் கல்வியை ஏற்படுத்தி, யார் யாருக்கு எவ்வெத் Q5stylodi 6 poupuyth offalopth (Aptitude Special skills) மிகுதியாக உள்ளனவோ - அவ்வவரை அவ்வத் தொழிற் கல்விக்கு அனுப்ப வேண்டும். படித்து முடித்ததும், அவர்கள் தாம் கற்ற தொழிலைச் செய்து வாழவழி தேடிக் கொள்ள லாம். பெரிய அளவில் கணக்கும் அறிவியலும் எடுத்துப் பட்டம் பெற்றவர்கள், எழுத்தர் (Clerk) வேலைக்கும் காவலர் (Police) வேலைக்கும் போகும் கேலிக் கூத்தைக் காண்கிறோம். இவர்கட்குப் பெரிய அளவில் கணக்கும் அறிவியலும் ஏன்? இவ்வாறே, பலர், படித்த படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் தொடர்பே யின்றிப் பணி புரிகின்ற னர். எனவே, படித்த படிப்பு பயனின்றிப் பாழாய்ப் போகாதவாறு கல்வித் திட்டமும் தொழில் திட்டமும் அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பய னுள்ள முறையில் கல்வி அளிக்கப்படா விடின், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது', 'பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது என்னும் பழமொழியை மெய்ப்பித்தவர்களா வோம்.

தொழிற் கல்வி

தொழில் கல்வி என்பது, அடிப்படைக் கல்விக்குமேல் L_] ©b) துறைத் தொழில்களைக் கற்றுக் கொடுக்கும் கல்வி யாகும். வீட்டுக்கு முன்னாலும் பின்னாலும் பயனற்ற அழகுச் செடி கொடிகளை வளர்ப்பது போல, பெயருக்கு முன்னாலும் பின்னாலும் படாடோபம் ஆன பட்டங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/138&oldid=544794" இலிருந்து மீள்விக்கப்பட்டது