பக்கம்:உலகு உய்ய.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

ததே! தேளால் கொட்டப்பட்ட ஒருவன் மற்றவர் சிலரை யும் தேள் கொட்டும்படிச் செய்த கதையும், மூக்கு அறு பட்ட ஒருவன் மற்றவர் சிலரின் மூக்குகளும் அறுபடும்படிச் செய்த கதையும் வழங்கப்படுவதைக் கேட்கலாம். வால் அறுந்த நரியொன்று மற்ற நரிகளும் வால் இழக்கும்படிச் செய்த கதை போன்றவையே இவை. பிறர்க்கு நல்லது செய்யாவிடினும் தீயது செய்யாதிருக்கலாமே! ஈண்டு நரி வெரூஉத்தலை யார் பாடியுள்ள

“நல்லது செய்தல் ஆற்றி ராயினும்

அல்லது செய்தல் ஒம்புமின்’ (195)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி கருதத் தக்கது தன்னல வேட்டைக்காரர்கள், பெரியோர்கள் பாடியுள்ள

பின் வரும் பாடல்களைப் படித்து நாணித் திருந்த வேண் டும். அப்பாடல்களாவன:

“தாமின் புறுவது உலகு இன்புறக் கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்’ (திருக்குறள்-399

நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'

(திருமூலர்-திருமந்திரம்-85)

"எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”

(தாயுமானவர்: பராபரக்கண்ணி-221)

'ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினை நீர் தானடைதல் குறித்தே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/14&oldid=544672" இலிருந்து மீள்விக்கப்பட்டது