பக்கம்:உலகு உய்ய.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

கூறியுள்ளார். 'நீ எதைச் செய்கிறாயோ அதைத்தான் &sjöprü” (“You learn what you practise) argårug, Qauff முழக்கங்களுள் ஒன்று. செய்து கற்றல் (Learning by doing) என்பது, இந்தக் காலப் புதிய கல்விக் கொள்கை

யாகும்.

அண்ணல் காந்தியடிகளோ, தொழில் வாயிலாகக் கல்வி கற்பிக்க வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். மாணாக்கர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையான ஆதாரமான ஊதியம் அளிக்க உதவும் கல்வியாக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. அதனால் இந்தத் திட்டத்திற்கு ஆதாரக் கல்வி (Basic Education)என்னும் பெயர் வழங்கப்பட்டது. படிக்கும்போதே ஊதியமும் கிடைக்கச் செய்யும் நல்ல திட்டமாகும் இது. இந்த மாதிரியான திட்டத்தைச் சில மாறுதல்களுடன் அறிஞர் பலர் பரிந்துரைத்துள்ளனர்.

குடும்ப - வாழ்க்கைக் கல்வி

குடும்பக் கல்வியும் வாழ்க்கைக் கல்வியும் உடன் அளிக்க வேண்டும். படித்துப் பட்டம் பெற்று வெளியே றும் இளைஞர் பலர்க்குக் கடைக்குச் சென்று ஒரு பொருள் வாங்கி வரவும் தெரியாது. குடும்பத்தை எவ்வாறு நடத் துவது என்பது பற்றியும் சிறிதும் தெரியாது. Home Science என்னும் பெயருடன் அளிக்கப்படும் கல்வி, பெண் கட்கே யன்றி, தக்க முறையில் ஆண்கட்கும் அளிக்க வேண்டும். உயரிய - நேரிய-சீரிய முறையில் வாழ வழி வகுக்கும் அற நூல்கள் பல உள்ளன. அந்த அறநூல் (Moral) கல்வியும் புகட்டப்பட வேண்டும். சமுதாயத்து டன் ஒன்றி இணைந்து வாழ்வது எப்படி என்ற முறையை விளக்கும் சமுதாயக் கல்வியும் (Sociology) அளிக்கப்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/140&oldid=544796" இலிருந்து மீள்விக்கப்பட்டது