பக்கம்:உலகு உய்ய.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

வேண்டும். பள்ளிக்கூடப் பாடத் திட்டத்தில் (Syllabus) இவற்றிற்கெல்லாம் இடமிருக்க வேண்டும்.

முதியோர் கல்வி:

உரிய இளமைப் பருவத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு இல்லாமற் போனவர்க்கு வயது வந்த பின்னர் அளிக் கும் கல்வி முதியோர் கல்வி (Adult Education) எனப்ப டும். முதியோர் என்றால் கிழவர் என்பதில்லை. படிக்காத இருபது வயது இளைஞரும் இந்தத் திட்டத்தில் அடங்கு வர். இவர்கட்கு இராப் பள்ளிக்கூடம் வைத்துக் கல்வி புகட்டவேண்டும். இவர்கட்குக் கல்வியின் இன்றியமை யாமை, சீர்திருத்தம், அறியாமை நீக்கம், நோய்த் தடுப்பு முறை, குழந்தை வளர்ப்பு, கைத்தொழில், பொதுத் தொண்டு, ஒற்றுமை, சமூகத்தோடு ஒன்றி வாழும் முறை, நல்ல பழக்க வழக்கம், இன்னபிறவற்றைக் கற்பிக்க வேண் டியது மிகவும் இன்றியமையாததாகும். எதையும் தாங்கும் இளமையில் கற்க முடியாதவன் முதுமையில் கற்பது அரிது’ என்னும் கருத்தில், முன்றுறை அரையனார் என்பவர் தமது பழமொழி என்னும் நூலில் கூறியுள்ள

s

'ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்

போற்றும் எனவும் புணருமோ” (1)

என்னும் பாடல் பகுதியை, முதியோர் கல்வி மூலம் நாம் பொய்யாக்க வேண்டும்.

இராப் பள்ளிகளில் சார்ந்து எழுத்து கற்றுக் கொண்டு படித்தறிய முடியாதவர்க்குக் கேள்வி (காதால் கேட்டல்) வாயிலாகக் கல்வியறிவு புகட்டலாம். எழுத்து கண்டு பிடிக்காத பழங்காலத்திலும் கல்வி இருந்தது. அப்போது கருத்துக்களும் பாடல்களும் வாய் வழியாகச் சொல்லச்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/141&oldid=544797" இலிருந்து மீள்விக்கப்பட்டது