பக்கம்:உலகு உய்ய.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

செவி வழியாகக் கேட்டுக் கற்றுக் கொள்ளப்பட்டன. இப் போதும், பின் தங்கிய சில நாடுகளில் - சில இடங்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருவதாகச் சொல்லப்படு கிறது. இது கேள்விக் கல்வியாகும். திருவள்ளுவர் திருக் குறளில் இந்தக் கேள்விக் கல்வியைப் பத்துப் பாடல்களின் வாயிலாக விளக்கியுள்ளார்.

'கற்றில னாயினும் கேட்க என்பது திருக்குறள். கேள்வியும் கல்வி யாகும்’ என்பது திவாகர நிகண்டு. 'கற் றல் கேட்டல் உடை யார் பெரியார்’ என்பது தேவாரம். 'கற்றலின் கேட்டலே நன்று என்பது பழமொழி நூற் பாடல். எனவே, சொற்பொழிவு, வானொலி, திரைப் படம், தொலைக்காட்சி முதலியவற்றின் வாயிலாக வயது வந்தோர்க்கு அறிவு கொளுத்திப் புத்துலகத்தைப் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். இவ்வாறாக உலக மக்கள் அனைவருக்கும் கட்டாயம் கல்வியறிவு அளிக்கப்பட வேண்டும்.

கடலை தின்னும்போது ஒரு கடலை சொத்தையா கவோ அழுகலாகவோ இருப்பினும் அது மற்ற கடலைகளை யும் கெடுத்து விடுதல் போல, சமூகத்தில் ஒரு சிலர் கல்லாக் களி மக்களாயிருப்பினும் சமுதாயம் முழுவதுக்குமே அது கேடாகும். எனவே, அனைவருக்கும் கல்வியளிப்பது பெரிய ஆக்கச் செயலாகும். இதனால் அனைவரும் ஆக்க வேலைகளில் ஈடுபட வாய்ப்பு உண்டு.

பாரதியாரின் பட்டியல்:

சுப்பிரமணிய பாரதியாரின் பரிந்துரையுடன் இந்தப் பகுதி தொடங்கப் பெற்றது; மீண்டும் அவரது பரிந்துரைப் பட்டியலுடன் இந்தப் பகுதியை முடிக்கலாம். இமயமலை யின் எவரெஸ்ட் கொடுமுடியை அடைவதற்குரிய முயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/142&oldid=544798" இலிருந்து மீள்விக்கப்பட்டது