பக்கம்:உலகு உய்ய.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

யிலிருந்து, நிலா உலகிற்குச் (சந்திர மண்டலத்துக்குச்) செல்வதற்குரிய முயற்சி உட்பட, பல ஆக்கவேலை முயற் சிகளை முன்கூட்டிப் பாரதியார் தம் பாடல்களில் பட்டி யல் படுத்தியுள்ளார்; பட்டியல் வருமாறு:

'வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்; பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்;எங்கள்

பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’.

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்: சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்'.

‘வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்

வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்;

எட்டுத் திசைகளிலும் சென்றிவை விற்றே

எண்ணும் பொருளனைத்தும் கொண்டு

வருவோம்’.

'முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;

மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே, நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து

நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே'.

"கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்; சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/143&oldid=544799" இலிருந்து மீள்விக்கப்பட்டது