பக்கம்:உலகு உய்ய.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்; ராச புத்தானத்து வீரர் தமக்கு

நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம்”

“பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்; கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்”

'ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம்;

ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;

ஒயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம்;

உண்மை சொல்வோம், வண்மைகள் செய்வோம்’

'குடைகள் செய்வோம், உழுபடைகள் செய்வோம்; கோணிகள் செய்வோம், இரும் பாணிகள் செய்வோம்; நடையும் பறப்பு முணர் வண்டிகள் செய்வோம்;

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்’

'மந்திரம் கற்போம், வினைத் தந்திரம் கற்போம்;

வானை யளப்போம், கடல்மீனை யளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்;

சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்”

'காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;

கலை வளர்ப்போம், கொல்லர் உலை,வளர்ப்போம்

ஒவியம் செய்வோம், நல்ல ஊசிகள் செய்வோம்;

உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய் வோம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/144&oldid=544800" இலிருந்து மீள்விக்கப்பட்டது