பக்கம்:உலகு உய்ய.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. போரில்லா உலகம்

போர் ஊக்கம்:

மக்களுக்கு இயற்கையாகச் சில ஊக்கங்கள் உள்ளன; அவை இயல் பூக்கங்கள் (Instinets) எனப்படும். அவற்றுள் ‘போர் ஊக்கம் (Pugnacity) என்பதும் ஒன்று. மக்களினத் தில் குழந்தைப் பருவத்திலேயே இந்த ஊக்கம் தோன்றி விடுகிறது. தன் விருப்பத்தை நிறைவு செய்து கொள்ளக் குழந்தை போராடுகிறது. தன் விருப்பம் நிறைவேறா விடின், குழந்தை அழுகிறது; தலையைத் தரையில் முட் டிக் கொள்கிறது; கைகளாலும் கால்களாலும் தரையை யும் எதிரில் இருப்பவரையும் புரண்டுகிறது; திட்டுகிறது; அடிக்கிறது; கண்ணில் கண்ட பொருள்களையெல்லாம் சிதைக்கிறது - எடுத்து வீசி அடித்து உடைக்கிறது; இன் னும் என்னென்னவோ செய்கிறது. இந்தப் போர் ஊக்கம் முதுமை எய்தி இறக்கும் வரையும் பல உருவங்களுடன் தொடர்கிறது.

கணவன் - மனைவி போர், பெற்றோர் - பிள்ளை போர், உடன் பிறந்தார் போர், உறவினர் போர், குடும் பப் போர், சாதி - மத - இன - நிற - மொழி வெறிப் போர், குழுப்போர், வீட்டுக்கு வீடு போர், தெருவுக்குத் தெரு போர், ஊருக்கு ஊர் போர், வட்டத்துக்கு வட்டம் போர், நாட்டுக்கு நாடு போர், உலகப் போர் - என்பன வாகத் தனி மாந்தர் போரிலிருந்து உலகப் போர் வரை யும் நிகழ்வதற்கு, உயிரோடு இயற்கையாக ஒன்றியுள்ள

– 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/146&oldid=544802" இலிருந்து மீள்விக்கப்பட்டது