பக்கம்:உலகு உய்ய.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

நாட்டுக்காக மறப் போர் புரிவது கடமையாகக் கருதப் பட்டது. நாட்டின் நன்மைக்காகப் போரில் உயிர் துறப் பது புகழ்ச் செயலாகப் போற்றப்பட்டது. இன்னும் சொல்லப் போனால், போரில் புண்பட்டுச் சாவதே புகழ்ச் சாவாக மதிக்கப்பட்டது. இதனால், இயற்கையாக இறந்த வர்களையும் மார்பைக் கிழித்துப் புண் உண்டாக்கி அடக் கம் செய்தனர். இந்த அளவுக்குப் போர் வெறி ஏற்றப் பட்டிருந்தது. போரில் இறந்த வீரர்கட்குக் கல் நாட்டி அவர்களைக் கடவுளாக்கி வழிபாடு செய்ததன் வாயி லாகக் கோயில்களும் சிலைகளும் வழிபாடுகளும் தோன்ற வித்து இடப்பட்டது.

போரில் புற முதுகு காட்டி ஒடுவது கோழைத்தன மெனப் பழிக்கப்பட்டது. இந்தப் பழி ஓடியவர்களோடு நில்லாது அவர்தம் குடுபத்தையும் சார்ந்தது - அவர் களைப் பெற்றெடுத்த தாய்மார்களையும் உறுத்தியது. தன் மகன் போரில் புற முதுகிட்டு ஓடி விட்டான் என யாரோ சொல்லக் கேட்ட மறத்தாய் ஒருத்தி, அஃது உண்மையாயின், அவனுக்குப் பால் கொடுத்த என் மார் பகத்தை அறுத்துக் கொள்வேன் எனச் சூளுரைத்து வாளு டன் போர்க்களம் புக்கபோது, தன் மகன் மார்பில் விழுப் புண் பட்டு மாண்டு கிடந்தமை கண்டு, அவனைப் பெற்ற போது அடைந்ததினும் பெரு மகிழ்வு எய்தினாளாம். மறத்தாய் மற்றொருத்தி, தன் தந்தை, தன் கணவன், தன் அண்ணன் தம்பியர் அனைவரும் போரில் மாண்டு போக, எஞ்சியிருந்த தன் இளஞ் சிறு மகனை யழைத்து, தலைவாரி ஒப்பனை செய்து, புத்தாடை யுடுத்திப் போர் வாளும் தந்து போருக்குப் போய் வெற்றியுடன் வருக என்று வாழ்த்தியனுப்பினாளாம். இத்தகைய மறச் செயல் களைப் பற்றிப் புறநானூறு போன்ற தமிழ் நூல்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/149&oldid=544805" இலிருந்து மீள்விக்கப்பட்டது