பக்கம்:உலகு உய்ய.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

“எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே

எண்ணிநல் லின்புறச் செயவும் அவ்வுயிர் களுக்கு வருமிடை யூற்றை

அகற்றியே அச்சநீக் கிடவும் * * * * * * இச்சை காண் எந்தாய்”

'கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த

கடுந்துயர் அச்ச மாதிகளைத்

தருணநின் னருளால் தவிர்த்தவர்க் கின்பம்

தரவும்வன் புலைகொலை யிரண்டும்

ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க

உஞற்றவும்......... இச்சை காண் எந்தாய்”.

"மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும்

வருத்தத்தை ஒருசிறி தேனும் கண்ணுறப் பார்த்துஞ் செவியுறக் கேட்டும்

கணமும் நான் சகித்திட மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்

இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணுமவ் வருத்தம் தவிர்க்கநல் வரந்தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்”

'வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்த்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோரென்

னேருறக் கண்டுளந் துடித்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/15&oldid=544673" இலிருந்து மீள்விக்கப்பட்டது