பக்கம்:உலகு உய்ய.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

நாட்டின் மீது படையெடுப்பதென்றால், திறந்த வீட்டில் நாய் நுழைவது போல்’’ திடு திடு வென்று உள்ளே போய் விடுவது அக்கால வழக்கமன்று. 'இந்த நாட்டின் மீதுபோர் தொடுக்கப் போகிறோம்; எனவே, இந்த நாட்டி லுள்ள ஆக்களும் (பசுக்களும்) பார்ப்பனரும் பெண்களும் பிணியாளரும்இன்னும் பிள்ளைபெறாதோரும் துறவியரும் முதலானோர் போரின் விளைவைத் தாங்க முடியாதாத லின்வெளியேறித்தற்காப்பு செய்து கொள்வாராக’ என்று முன்கூட்டி அறிவிப்புச் செய்து விட்டே பின்னர்ப் போருக்கு எழுவர். இதனை, நெட்டிமையார் என்னும் புலவர் பாடிய,

"ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை பீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்.அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மினென அறத்தாறு துவலும் பூட்கை மறத்தின்’ (9)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதியாலும், சிவஞான முனிவர் இயற்றிய

'மண்டமர் மேல் கொடு வந்தனம் இன்னே

தண்டக நாட்டுறை தாபதர் நோயோர் பெண்டிரும் நும்மரண் ஏகுதிர் பென்டென்று எண்டிசை யார்ப்ப இசைப் பறை சாற்றி”

என்னும் காஞ்சிப்புராணப் பாடலாலும், திருத்தக்கதேவர் இயற்றிய

"நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப் பார்

என்பாரை ஓம்பேனெனின் யான் அவனாக என்றான்' (443)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/152&oldid=544808" இலிருந்து மீள்விக்கப்பட்டது