பக்கம்:உலகு உய்ய.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

படை மடம்:

படைக்கலம் (ஆயுதம்) இழந்த இராவணனை நோக்கி, 'இன்று போய் நாளை வா’ என்று இராமன் கூறியதாக இராமாயண வரலாறு அறிவிக்கிறது. போரின் நடுவே மனம் சோர்ந்து போனவனையும் மயிர் முடி குறைந்தோ னையும் புறமுதுகிட்டு ஒடுபவனையும் படைக்கலம் இழந்த வனையும் சமமான படைக்கலம் உடைத்தாயில்லாதவனை யும் கொல்லாது காப்பாற்றி அனுப்புவது, போர்த்துறை யில் ஒருவகை மடச் செயல் அல்லவா? இத்தகு செயலுக் குப் படை மடம்' என்னும் பெயர் தமிழ் நூல்களில் வழங் கப்பட்டுள்ளது.

பழைய செய்திகளாகிய- தமிழர்களின் அறப்போர் முறையினையும் படை மடத்தினையும் இங்கே தந்திருப்ப தின் நோக்கம், இந்தக் காலத்தினராயினும் இனி எந்தக் காலத்தினராயினும், எல்லாத் துறைகளிலும் அறநெறி யைப் பின்பற்ற வேண்டும் என்பதை அறிவிப்பதேயாம்.

போர்த் தூது:

இந்தக் காலத்தில் இரு நாடுகட்கிடையே போர் நிக ழாது தடுக்க ஒன்றிய நாடுகளின் மன்றம் (United Nation) முயல்வது போல, அந்தக் காலத்திலும் போர்த் தூது முயற்சி பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. பாண் டவ மன்னர்கள் கண்ணபிரானைக் கெளரவ மன்னர்களி டம் தூது அனுப்பியதாகப் பாரத நூலும், இராமன் அங் கதனை இராவணனிடம் தூது அனுப்பியதாக இராமாயண நூலும், முருகன் வீரவாகுவைச் சூரபதுமனிடம் தூது அனுப்பியதாகக் கந்த புராண நூலும் கூறுகின்றன. இந்த மூன்று தூதுக்களும் வெற்றி பெறவில்லை. ஆனால் தூது முயற்சிகளின் வெற்றிச் செய்திகள் சில, பழந்தமிழ் இலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/154&oldid=544810" இலிருந்து மீள்விக்கப்பட்டது