பக்கம்:உலகு உய்ய.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

கியங்களில் கூறப்பட்டுள்ளன. இதனை இன்றைய உலகம் அறிந்து கொள்வது நன்று. இற்றைக்கு (1986)ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன், நலங்கிள்ளி, நெடுங் கிள்ளி என்னும் மன்னர் இருவருக்கு இடையே நிகழ விருந்த போரை, கோவூர்கிழார் என்னும் புலவர் தூது செய்து தடுத்தாராம். இவரே, மலையமான் திருமுடிக் காரி என்னும் மன்னனின் மக்களைக் கிள்ளி வளவன் என் னும் மன்னன் கொல்லாதவாறு தடுத்துக் காத்தாராம். ஒளவையார் என்னும் பெண்பாற்புலவர், அதியமான் நெடு மான் அஞ்சி என்னும் மன்னனிடமிருந்து, தொண்டை மான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் தூது சென்று அமைதி காத்தாராம். இன்ன பிற செய்திகளைப் புற.நா னுாறு போன்ற நூல்களால் அறியலாம்.

போர்த் துறையாம் மறத்துறையிலேயே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்த தலையாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்’ என்னும் பாண்டிய மன்னனை, மருதனிள நாகனார் என்னும் புலவர், மறத்துறையை அறவே விட்டு அறநெறிகளைப் பின்பற்றுமாறு செய்வித்த வரலாறு மதுரைக் காஞ்சி என்னும் நூலால் அறியப்படு கிறது. இவ்வாறே, மாடலன் என்னும் பெரியார், சேரன் செங்குட்டுவன் என்னும் மன்னனது சீற்றத்தைத் தணித்து, மறத்துறையை விட்டு அறத்துறையைப் பின்பற்றுமாறு செய்வித்த வரலாறு, சிலப்பதிகார நூலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. புத்தத் துறவியர், கலிங்கப் போரை வென்ற பேரரசன் அசோக மன்னனுக்குப்போரினால்விளைந்திருந்த துயரநிலைகளைச் சுட்டிக்காட்டி, இனிப் போர்த்துறைப் பக்கமே உள்ளத்தைத் திரும்பச் செய்யாது அறத்துறை நெறிகளையே பின்பற்றுமாறு மாற்றிய வரலாறு உலகம் அறிந்ததாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/155&oldid=544811" இலிருந்து மீள்விக்கப்பட்டது