பக்கம்:உலகு உய்ய.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

மேற்கூறிய தூது முயற்சிகளையும் அமைதி காத்த அரும் பணியையும் இன்றைய உலகம் எண்ணிப் பார்க்க வேண்டும்; அறிவுக் கண்னைத் திறந்து பார்க்க வேண்டும்.

போரின் கொடுமைகள்:

போரின் கொடிய விளைவுகளைச் சொல்லி முடியாது. மாண்டு போகும் மறவர்களின் பெற்றோர், மனைவி, மக் கள், மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முதலா னோர் அடையும் மனத்துயருக்கு அளவேயில்லை. எவ்வளவு பணம் தந்து ஈடுசெய்யினும் ஆள் கிடைக்க முடியுமா? உற்றார் உறவினர்கள் இருக்கட்டும். மாண்டுபோன மற வர்களின் மனநிலை அப்போது எப்படியிருந்திருக்கும்? மாண்டவர் போக, மாளாமல் குத்துண்டும் வெட்டுண்டும் புண்பட்டு உயிரோடு போராடிக் கொண்டிருந்தவர்கள் நிலை எவ்வாறிருந்திருக்கும்? பின்னர்ப் புண் குணமாகி உயிர் பிழைத்துக் கொண்டவருள்ளும் கை-கால்-கண் போன்ற உறுப்புக்களை யிழந்து வாழ்வோரின் துயரநிலை எத்தகையது? இக்கொடுமைகளையெல்லாம் போர்

வெறித்தலைவர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

மறவர்களின் நிலையும் அவர்தம் குடும்ப நிலைமையும் ஒரு புறம் இருக்க, இருந்த செல்வமும் உணவுப் பொருள் களும் தீர்ந்து போனமை, கட்ட டங்கள் - ஆற்றுப் பாலங் கள் முதலியவற்றின் அழிவு, உற்பத்திக் குறைவு, போக்கு வரவுச் சீர் குலைவு முதலியவற்றால் பசியும் - பஞ்சமும் - பற்றாக் குறையும் ஏற்பட்டு மக்களினம் படும்பாடு சொல்லுந்தரத்ததா? உலகப் பெரும் போர்களால் உலக மக்களினம் முழுவதும் பட்ட பாடுகள் அறியாதனவா? இப்போது உலகம் - உலக நாடுகள் நெருங்கியிருப்பதால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/156&oldid=544812" இலிருந்து மீள்விக்கப்பட்டது