பக்கம்:உலகு உய்ய.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157

போர், பிளாசிப் போர், பிளெனிம் போர், பிஷப்புப்போர், போயர் போர், பல்ட்டாவா போர், மகாராட்டிரப் போர், மார்ஸ்ட்டன் மூர் போர், மாஜான்டா போர், முக்டன் போர், மைசூர்ப் போர்கள், ரான்தம் போர், ருஷ்ய - ஜப் பானியப் போர், ரோகில்லாப் போர், ரோஜா போர், லூட்சன்போர், வாட்டர் லூபோர், வால்மீ போர், வர் துன்போர், ஜப்பானிய - கொரியப் போர், ஜென் கின்ஸ் காதுப் போர், ஸ்ட்டாம் போர்டு பாலப் போர், ஸ்பானிய வார்சுரிமைப் போர், வடகொரிய-தென் கொரியப் போர், சீன - இந்தியப் போர், இந்திய பாகிஸ்தான் போர், இஸ்ரேல் - அரபு நாடுகளின் போர், வட - தென்வியட் நாம் போர், ஈரான் - ஈராக் போர், முதலியன நாகரிக மக்களின் நகையாடலுக் குரிய போர்களாகும். இவையே யன்றி, இப்போது, வல்லரசுகளின் கெடு பிடிப் போர் வேறு உலகத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது.

போர்க் காரணங்கள்:

பல்வேறு காரணங்களால் போர்கள் எழுந்தன. அவற் றுள் சில:- புதிய நாடு பிடிக்கும் அவா, எல்லையைப் பெருக்கிக் கொள்ளும் விருப்பம்,தாமோ-தம் முன்னோரோ விட்டவற்றினை மீண்டும் பிடிக்கவேண்டும் என்ற முயற்சி, நீ பெரியவனா- நான் பெரியவனா - நீ உயர்ந்தவனா-நான் உயர்ந்தவனா என்ற உயர்வு தாழ்வுச் சிக்கல்கள், மதம் -இனம்-நிறம் முதலிய வேறுபாட்டு வெறியுணர்வு, விடு தலை வேட்கை, பொதுவுடைமை - தனியுடைமை போன்ற கொள்கைச் சிக்கல்கள், பிறநாடுகளில் வாணிகச் சந்தை பிடிக்கும் நோக்கம், செல்வ வளமுள்ள நாடுகளில் உள்ள செல்வப் பொருள்களைத் தாம் கொண்டுவந்து விடவேண்டும் என்ற பேரவா முதலியனவாம். பரந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/158&oldid=544814" இலிருந்து மீள்விக்கப்பட்டது