பக்கம்:உலகு உய்ய.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மனப் பான்மை யிருப்பின், இவையெல்லாம் எளிதில் விலக்கிக் கொள்ளக் கூடிய காரணங்களே யாகும்.

இருக்கும் நாட்டை ஒழுங்காய் ஆண்டால் போதாதா? மானில் ஒரு புள்ளி ஏறினால் என்ன - குறைந்தால் என்னஎன்பார்கள்; அதுபோல, எல்லை சிறிது நீண்டால் என்ன. குறைந்தால் என்ன? எத்தகைய வேறுபாட்டுணர்வும் கூடாது. விடுதலை விரும்பும் நாடுகட்கு விடுதலை கொடுத்து விடவேண்டியது தான்! இன்னொருவரின் பகுதிகளை விட்டுக்கொடுத்து விட வேண்டியதே! எத் தகைய வேற்றுமையும் கூடாது; எல்லாரும் நிகர் - எல் லாரும் வாழவேண்டும் என்னும் ஒரே கொள்கையே - ஒரே உணர்வே - எல்லார்க்கும் இருக்க வேண்டும். பிற நாடுகளைச் சுரண்டும் பேரவாவை அறவே விட்டொழித்து விட வேண்டும். இன்ன பிற நன்முறைகளைக் கடைப் பிடிக்கின், போரைப் போர் செய்து துரத்திவிடலாம். இல்லையேல், துடைக்க முடியாத துன்பங்கட்கு மக்களினம் உட்பட வேண்டியதுதான்!

களம் கண்டு இரங்குதல்:

இற்றைக்குச் (1986) சுமார் இரண்டாயிரம் ஆண்டு கட்கு முன்பு, தலையாலங் கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன், தமிழ் நாட் டில் தலையாலங்கானம் என்னும் இடத்தில், தன்னை எதிர்த்த பகை மன்னர் எழுவருடன் பொருது வெற்றி பெற்றான் என்பது, பழங்காலத் தமிழக வரலாறு. இதனை அம்மன்னன் மீது நக்கீரர் என்னும் பெரும்புலவர் பாடிய 'நெடுநல் வாடை என்னும் நூலால் அறியலாம். அந்தப் பாண்டிய மன்னன், இரவிலே, தன் இருப்பிடத்தினின்றும், புண்பட்டுக் கிடக்கும் போர்மறவர்களைக் காணப் புறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/159&oldid=544815" இலிருந்து மீள்விக்கப்பட்டது