பக்கம்:உலகு உய்ய.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161

நெறியை விட்டு அறநெறியைக் கடைப்பிடித்துப் புத்த மதத்தைத் தழுவினானாம். இது உலகறிந்த வரலாறு.

போர்க் களத்து உதவி:

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு, வட இந்தியா வில், பஞ்ச பாண்டவர் என்னும் உடன் பிறப்பு மன்னர் ஐவர்க்கும், இவர்களின் பங்காளிகளாகிய கெளரவர் என் னும் உடன்பிறப்பு மன்னர்கள் நூற்றுவர்க்கும் பல நாள் பெரும் போர் நிகழ்ந்தது. இந்தியாவிற்குப் பாரதம் என் பது பழைய பெயராகும். எனவே, இந்தப் போருக்குப் பாரதப் போர் என்னும் பெயர் வழங்கப்பட்டது. தென் பாரதமாகிய தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் ஒரு பகுதி யான சேர நாட்டில் அப்போது ஆட்சி புரிந்த உதியன் சேரலாதன்' என்னும் தமிழ் வேந்தன், பாரதப் போரில் புண்பட்டும் உணவின்றியும் தவித்தவர்க்கு உணவளித்துக் காப்பதற்கு ஆவணபுரிந்தானாம். அதனால் இத்தமிழ் வேந்தன், 'சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்' எனப் பெயர் வழங்கப் பெற்றானாம். இந்த வரலாறு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்களில் . கூறப்பட்டுள்ளது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே போர்க்களத்தில் பொது மன்னர் ஒருவரால் புரியப்பட்ட இந்தப் பேருதவி பற்றியும் இன்றைய உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, இது பற்றிய இலக்கியப் பாடல்கள் இரண்டு வருமாறு:

‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ

நிலந்தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது

கொடுத்தோய்.”,

– 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/162&oldid=544818" இலிருந்து மீள்விக்கப்பட்டது