பக்கம்:உலகு உய்ய.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

துடித்தவர் பலர். அன்று மாலை தற்செயலாய் அவ் வழியே சென்றுகொண்டிருந்த சுவிட்சர்லாந்து நாட்டுச் செல்வர் ஒருவர் அந்தப் பொல்லாத காட்சியைக் கண்டு உள்ளம் துடித்தார்; ஊருக்குள் சென்று சிலரை அழைத்துக் கொண்டு வந்து, புண்பட்டுக் கிடந்தவர்கட்குத் தண்ணீர் தந்தும் புண்களில் மருந்திட்டுக் கட்டுபோட்டும் பல் வகை உதவி புரிந்தார். இதை வளர்த்துவது எதற்கு? இவரது முயற்சியால் உலகில் செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross society) என்னும் இயக்கம் எழுந்தது. இவரது பெயர் “@gmöörifi @65Imrgàrl *.” (Henry Dunant) என்பதாகும்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்தச் சங்கம் உண்டாக்கப்பட்டது. இந்தச் சங்கத்தினர், போர் நடை பெறும் இடங்கட்குச் சென்று, இன்னார்-இனியார் எனப் பாராமல் நடுவு நிலைமையுடன் இருதரப்பினர்க்கும் உதவி புரிவர்; இறந்தவர்களை எடுத்துப் போடுதல், புண்பட்டுக் கிடப்பவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் முதலிய பணிகளைப் புரிவர். இவர்கட்குத் தனி அடையாளமும் இவர்களின் கூடாரங்கட்கும் தனி அடையாளமும் உண்டு. போர் புரிபவர்கள், செஞ்சிலுவைச் சங்கக் கூடாரத்தை யும் சங்கத்தாரையும் தாக்கமாட்டார்கள். போரில்லாக் காலங்களிலும், இயற்கையின் கொடுமைகளால் மக்கள் அல்லல் உறும்போது இந்தச் சங்கத்தினர் வேண்டிய உதவிகள் புரிவர். -

சுவிட்சர்லாந்து நாட்டினரான ஹென்ரி டுனான்ட் என்பவர் இந்த இயக்கத்தைத் தொடங்கியதால், அந்த நாட்டுக் கொடியே இந்த இயக்கத்தின் கொடியாக ஆக் கப்பட்டது. ஆனால் அதில் ஒரு மாறுதல் செய்யப்பட்டது. அந்நாட்டுக் கொடி சிவப்புத் துணியில் வெள்ளைச் சிலுவை பொறிக்கப்பட்டிருக்கும். அதை அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/164&oldid=544820" இலிருந்து மீள்விக்கப்பட்டது