பக்கம்:உலகு உய்ய.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மாற்றி, வெள்ளைத் துணியில் சிவப்புச் சிலுவை பொருந்தப் பொறிக்கப்பட்டு இவ்வியக்கத்தின் கொடி யாக்கப்பட்டது. ஆனால், எகிப்து, துருக்கி, சிரியா, ஈராக், ஜோர்டான், பாகிஸ்தான் முதலிய முசுலீம் நாடுகள் சிவப்புச் சிலுவைக்குப் பதிலாகச் சிவப்பு இளம் பிறையைக் (Red crescent) கொடியில் பொறித்துக் கொண்டன. ஈரான் நாடு, சிலுவைக்குப் பதிலாக, சிவப் புச் சிங்கமும் செஞ்ஞாயிறும் பொறித்துக் கொண்டது. இவ்வாறான செஞ்சிலுவை, செவ்விளம் பிறை, செஞ் சிங்கம் என்னும் மத அடிப்படையான வேறுபாட்டுக் குறி கள் கூடா. சிவந்த ஞாயிறு எல்லாருக்கும் பொதுவானது. எனவே, உலக நாடுகள் யாவும், இந்த ஒற்றுமை உதவி இயக்கத்திலும் வேறுபாடு காட்டாமல், செஞ்ஞாயிற்றை வெள்ளைத் துணியில் பொறித்து, செஞ்கிலுவைச் சங்கம்’ என்னும் பெயரை மாற்றி செஞ்ஞாயிற்றுச் சங்கம்’ எனப் பெயர் வழங்குவது நல்லது. திங்களை (சந்திரனை) வெண் டிங்கள்’ எனவும் ஞாயிற்றைச் செஞ்ஞாயிறு’ எனவும் வழங்குதல் மரபு.

விளக்கேந்திய வெள்ளை மைனா

செஞ்சிலுவைச் சங்கத்தின் தந்தையாகிய ஹென்ரி டுனான்ட் அவர்கட்கு முன்பே, பிளாரன்சு நைட்டிங்கேல்’ (Florence Nightingale) Graërgylb sgå1660 g/lbsoldustri, போரில் புண்பட்ட வீரர்கட்கு உதவும் பணியில் ஈடுபட் டிருந்தார். மருத்துவத் துறையில் ஈடுபட்டிருந்த இவர், கிரைமியா (crimea) நாட்டுப் பகுதியில் நடந்த போரில் (1854-1856) புண்பட்டுத் துடித்துக் கொண்டிருந்த மறவர் கட்கெல்லாம் வேண்டிய உதவிகளைப் புரிந்தார். இரவி லும் கையில் விளக்கு ஏந்திக்கொண்டு மருத்துவத் தாதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/165&oldid=544821" இலிருந்து மீள்விக்கப்பட்டது