பக்கம்:உலகு உய்ய.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

கள் பலருடன் புண்பட்ட மறவர்கள் படுத்துக் கிடந்த இடமெல்லாம் சுற்றித் திரிந்து ஆவன புரிந்தார். அதனால் @ausoff ‘The Lady With The Lamp’ orgârgyth GLUTITG) குறிப்பிடுவதும் உண்டு. தமிழ் நாட்டில் தலையாலங் கானம் என்னும் இடத்தில் நடந்த போரினால் புண்பட்ட மறவர்கள் படுத்துக்கிடந்த இடமெல்லாம், இரவு முழுவ தும் விளக்கின் உதவியுடன் சுற்றித் திரிந்து புண்பட்ட மறவர்கட்கு ஆவன புரிந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் இங்கே நினைவுக்கு வருகிறான்

அன்றோ?

மனித மடையர்கள்:

அந்தக் காலத்திலும்-இந்தக் காலத்திலும் போர்க் களத்தில் செய்யப்பட்ட-செய்யப்படும் உதவிகளைப் பற்றி இங்கே அறிவித்திருப்பதின் நோக்கம், குறிப்பிட்ட ஒரு கருத்தைச் சுட்டிக்காட்டுவதற்கேயாம். அ.. தாவது:மாந்தர் சிலர் ஒரு புறம் போரிட்டுப் புண் உண்டாக்கிக் கொண்டிருப்பதும், வேறு சிலர் அப்புண்ணுக்கு மருந் திட்டுக் கட்டு போடுவதும் ஆகிய விந்தையான- இல்லை யில்லை-அறியாமையான-இல்லையில்லை-பைத்தியக்காரத் தனமான செயலைச் சுட்டிக்காட்டுவதற்கேயாம். முதலில் ஒருவன் யாருக்கும் தெரியாமல் வீடுகளில் உள்ள கண்ணா டிக் கதவுகளை உடைத்துக் கொண்டு போவானாம்! பின் னால் ஒருவன், கண்ணாடிக் கதவு பழுது பார்ப்பது -கண் ணாடிக் கதவு பழுது பார்ப்பது என்று கூவிக்கொண்டு வருவானாம்! இது போன்றல்லவா இருக்கிறது அது? ஆடு மாடு முதலிய விலங்கினங்கட்கு வாய் இருந்தால், மனிதர் களை நோக்கி, ஏ, மனித மடையர்களே! ஒருவர் புண் உண்டாக்குவதும் இன்னொருவர் புண்ணுக்கு மருந்திடுவ தும் என்ன மடத்தனம்?’ என்று கேட்டாலும் கேட்கலாம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/166&oldid=544822" இலிருந்து மீள்விக்கப்பட்டது