பக்கம்:உலகு உய்ய.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169

கூறலாம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருந்த காலத்தில் இந்திய மக்களுட் பலர், அவர்களை எதிர்த்து விடுதலைக்காகப் போராடிக் கொண் டிருந்தனர். அவ்விடுதலை வீரர்களுள் பாரதியாரும் ஒருவர். எனவே, இந்திய மக்கட்கு வீர உணர்வை ஊட்டுவதற்காக அவர் முனையிலே முகத்து நில்’, ‘போர்த் தொழில் பழகு" என்னும் புரட்சிக் கருத்தை வீசியிருக்கலாம். இது காலச் சூழ்நிலைக்கு ஏற்பப் பாடப்பட்டிருக்கலாம். எனவே, எல் லாக் காலத்துக்கும் இது பொருந்தாது. ஈண்டு, பாரதி தாசன் பாடியுள்ள

"புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்”

(பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி)

என்னும் பாடல் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது. போரிடும் உலகத்தை வேரோடும் அழிப்போம் என்று கூறியிருப்பதின் பொருள், போரே இல்லாத-அமைதியான புதிய உல கத்தை அமைப்போம்-என்பதாகும்.

'பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்னும் பழ மொழியொன்று தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது. உண் ணும் பந்திக்குச் செல்வோரின் வரிசையில் முன்னால் இருபோர்ப் படை மறவர் வரிசையில் பின்னால் இரு- என்ப தாக இப்பழமொழிக்குப் பொருள் செய்து, இஃதும் வீர மற்ற கோழைத்தனத்துக்கு வித்திடுவதாகக் கூறுவதுண்டு. ஊருக்கு ஒர் அரசர் இருந்துகொண்டு ஆண்டு முழுதும் போர் செய்துகொண்டிருந்த அந்தக் காலத்தில், போர் எப்பொழுதும் கூடாது-யாரும் போருக்குப் போகக் கூடாது என்னும் பொருளில் இந்தப் பழமொழி தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/170&oldid=544826" இலிருந்து மீள்விக்கப்பட்டது