பக்கம்:உலகு உய்ய.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

நாடுகளுக்குள் மண்டலச் சார்பு கூடாது. ஒரு சில நாடுகள் கூடி ஒரு கூட்டு மண்டலமாகவும், வேறு சில நாடுகள் கூடி வேறொரு கூட்டு மண்டலமாகவும் அமை வது கூடாது. இதனால் போர் மூள வழி ஏற்படலாம். ஒரு சிறிய நாடு தனக்குப் போதிய வலிமை இல்லாமை யால், பக்கத்திலுள்ள பெரிய நாட்டுடன் போர் தொடுக் காமல் நட்பாயிருக்கிறது. பெரிய நாடும், பக்கத்திலுள்ள சிறிய நாட்டுடன் போர் தொடுப்பது வீரமாகாது-கோழை மையாகும் எனக்கருதிப் பெருந்தன்மையோடு அந்தச் சிறிய நாட்டை அணைத்துக் கொண்டு உதவியும் செய்கிறது. இவ்வாறின்றி, ஒரு சிறிய நாடு வேறு பல நாடுகளுடன் கூடி ஒரு கூட்டு மண்டலத்தில் சேருமாயின், அந்த மண்ட லத்தின் தெம்பைக் கொண்டு, பக்கத்தில் உள்ள பெரிய நாட்டுடன் ஒத்துப் போகாமல்-நட்பு வளர்க்காமல் முர னிக் கொண்டிருக்கும்; இதனால், பெரிய நாடும் அச்சிறிய நாட்டின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டேயிருக்கும். எனவே, மண்டலச் சார்பின்மை, போர் தடுப்பு வழிமுறை களுள் ஒன்றாகும்.

உலக நாடுகள் படைக் கருவிகளைப் படைப்பதையும், படைக் கல்லூரிகள் நிறுவிப் படைப்பயிற்சியளிப்பதையும், நாடுபிடிக்கும் பேரவாவினையும் விட்டொழிக்க வேண்டும். நீ பெரியவனா-நான் சிறியவனா-என்ற உயர்வுச் சிக்கல்தாழ்வுச் சிக்கல்கட்கு ஆட்பட்டுக் கெடுபிடிப் போர்ப் (Cold war) பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதை அறவே அகற்ற வேண்டும்.

உலகத்தின் பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும். முடி மன்னர் எல்லாரும் பிடி சாம்பலானதை எண்ணிப் பார்க்க வேண்டும். மா அலெக்சாந்தர், நெப் போலியன், ஹிட்லர், அசோகன் முதலியோர் உலகத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/173&oldid=544829" இலிருந்து மீள்விக்கப்பட்டது