பக்கம்:உலகு உய்ய.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

உலக ஒற்றுமை நிறுவனங்கள்:

நெப்போலியனது வீழ்ச்சிக்குப் பின்னர், போரின் கொடிய விளைவுகளை அனுபவித்து உணர்ந்த உலக அறி ஞர்களிடையே, இனி உலகில் போரே ஏற்படாதபடி தடுக் கக்கூடிய உலக ஒற்றுமைக் கழகம் நிறுவவேண்டும் என்ற உணர்வு அரும்பிற்று. .

முதல் உலகப் பெரும்போர் முடிந்ததும் பாரிசில் ‘உலக அமைதி (சமாதான) மாநாடு’ கூடியது. அதன் பய னாய் உலக ஒற்றுமைக் கழகம்' உருவாகியது. உலகில் போர் நிகழாது தடுப்பது இதன் இன்றியமையாக் குறிக் கோளாகும். ஆனால் நடைமுறையில் இது இயலவில்லை. இரண்டாவது உலகப் பெரும் போர் தோன்றியதே, இந்த உலக ஒற்றுமைக் கழகத்தின் தோல்விக்குச் சான்றாகும்’

இரண்டாவது உலகப் பெரும் போர் முடிவுற்றதும் இப்போதுள்ள ஒன்றிய நாடுகளின் உலக மன்றம்: (U.N.O) 1945-அக்டோபர்-24 ஆம் நாள் முழு வடிவம் பெற்றது. இப்போது இது பெரிய அளவில் இயங்கிக் கொண்டுள்ளது. உலகின் எந்த மூலையிலும் போர் என்ற பேச்சே எழக்கூடாது - உலக ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஊறு நேரிடின் உலகத்தார் அனைவரும் ஒன்றுபட்டுக் காக்க வேண்டும் என்பது இதன் தலையாய குறிக்கோள். ஆனால் நிகழ்வது என்ன? இந்த அமைப்பு தோன்றிய பின் னரும் உலகில் எத்தனையோ போர்கள் நடந்து விட்டன. இந்த அமைப்பால் போர்களை உடனே நிறுத்த முடிய வில்லை. காலம் கடந்தாயினும் சில போர்களை நிறுத்தி யிருப்பது பாராட்டத் தக்கதே. இது போதாது. உடனடி யாகப் பயன் காண வேண்டும். 1980 - ஆம் ஆண்டில் தொடங்கி 1986 ஆம் ஆண்டிலும் நடைபெற்றுக் கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/177&oldid=544833" இலிருந்து மீள்விக்கப்பட்டது