பக்கம்:உலகு உய்ய.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

டிருக்கும் ஈரான் - ஈராக் போரை இந்த அமைப்பால் இன் னும் நிறுத்த முடியாமைக்கு உரிய காரணத்தை உலக அறிஞர்கள் ஆய்ந்து உணர்ந்து, இனி இத்தகைய நிலை ஏற்படாதவாறு செயல் புரிய வேண்டும். இல்லையேல், போர்கள் நிகழ்ந்து கொண்டே யிருக்கும்.

அரசியல் கட்சிப் போர்:

'வரலாறு தன்னைத் திருப்பிக் கொண்டே யிருக்கும் ” (History repeats itself) argårmy Qāmājas 3 p_airó). Ø55 கேற்பப் போர்கள் எந்தக் காலத்திலும் எந்த வடிவத்தி லாயினும் இருந்து கொண்டே யிருக்கும் போலும்! இப்போ துள்ள ஏதேனும் ஒரு பெரிய நாட்டை எடுத்துக் கொண்டு ஆராயின் இது விளங்கும். (எந்த நாட்டையும் குறிப்பிட வேண்டா) இந்தப் பெரிய நாட்டில் இப்போது ஒரே அரசே இருக்கிறது. பண்டைக் காலத்திலோ இந்தப் பெரிய நாட்டில் நூற்றுக் கணக்கான மன்னர்கள் இருந்து கொண்டு எப்போதும் ஒருவர்க் கொருவர் போரிட்டுக் கொண்டே யிருந்தனர். இதனால் மக்களுக்கு நிலையான அமைதி இருந்ததே கிடையாது. எப்போது எவன் தாக்கு வானோ - எப்போது எவன் வீட்டையும் ஊரையும் எரித்துத் தீ வட்டிக் கொள்ளை நடத்துவானோ - எப் போது எவன் யாரைக் கற்பழிப்பானோ - எப்போது எவன் யாரைக் கடத்திக் கொண்டு போவானோ - எப் போது யார் யார்க்குக் கை கால்கள போகுமோ-எப்போது யார் யார் மடிவார்களோ - என்றெல்லாம் மக்கள் அலமந்து அமைதியின்றி அச்சமும் திகிலும் கொண்டிருந் தனர். இப்போது பெரிய நாடுகளில் பல மன்னர்களின் ஆட்சி மறைந்து ஒரு மன்னரின் முடியாட்சியோ அல்லது

– 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/178&oldid=544834" இலிருந்து மீள்விக்கப்பட்டது