பக்கம்:உலகு உய்ய.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

ஒரு கட்சியின் குடியாட்சியோ நடைபெறுகிறது .இதனால், பண்டு பல மன்னர்களின் ஆட்சி யிருந்த போது மக்கள் கொண்டிருந்த அளவுக்கு அச்சமும் திகிலும் இழப்புக்களும் இப்போது இல்லை.

இப்போது, பொதுவுடைமை (கம்யூனிஸ்ட்) நாடுகளில் ஒரே கட்சி உள்ளது - ஒரே கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா (U.S.A.) போன்ற நாடுகளில் இரண்டு பெரிய கட்சிகளே மாறி மாறித் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி நடத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் ஒரு கட்சி ஆட்சி யிருப்பினும், ஈசல்கள் போல எண்ணற்ற கட்சிகள் உள்ளன. ஒரு நாட்டில் எண்ணிலாக் கட்சிகள் இருப்பதால், கட்சிக்குக் கட்சி எப்போதும் பூசலும் போரும் நடைபெறுவதைக் காணலாம். குத்து - வெட்டு கொலைகள் போன்ற கொடுமைகள் நிகழ்வது, எப்போ தும் எளிய - இயற்கையாகிவிட்டது. கட்சித் தலைவர்க ளின் தூண்டுதலால், கட்சித் தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள் விளைவிக்கும் கொடுமைகட்கு அளவேயில்லை. இதனால், பல மன்னர்கள் இருந்த காலத்தில் மக்கள் அமைதியிழந்து அலமந்தது போலவே, இப்போதும் பொது மக்கள் பல சமயங்களில் அல்லலுற நேர்கிறது.

பொதுமக்களேயன்றி - கட்சித் தொண்டர்களேயன்றி பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியின் பெயரால் நாடா ளும் ஆட்சித் தலைவரும் அமைதியாய்த் தம் பணியை ஆற்றுவதும் இப்போது அரிதாயிருக்கிறது. எப்போது நம் ஆட்சி கவிழுமோ - எப்போது எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்ளுமோ? என ஆட்சித் தலைவர் அச்ச மும் ஐயமும் கொண்டவராய், ஆட்சியைக் கவனிப்பதை விட, தம்மையும் தம் கட்சியையும் வலுப்படுத்திக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/179&oldid=544835" இலிருந்து மீள்விக்கப்பட்டது