பக்கம்:உலகு உய்ய.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

கோணத்தில் கூறப்பட்டுள்ளது. அஃது ஈண்டு நமது நூலுக்கு ஏற்புடைத்தாகாது. நாம் எடுத்துக் கொண்ட 'உலகு என்பது, இடவாகு பெயராய், உலகில் உள்ள உயர்ந்தோர்-தாழ்ந்தோர் ஆகிய உயர் திணை உயிரிகள் அனைவரையும், மற்றும், அஃறிணை உயிரிகள் அனைத் தையும் குறிப்பதாகும். வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய இராமலிங்க அடிகளாரின் அறிவுரைப் படி, நாம், நம் ஒத்த உயர்திணை உயிரிகளையே யன்றி, மற்ற அஃறிணை உயிரிகளையும் துன்புறுத்தாது - கொல் லாது - கொன்று புசியாது - பேணிக் காக்க வேண்டும். உலகு உய்தல் என்றால், உலக உயிரிகள் எல்லாம் உய்தல்

என்பதாகும்.

உலகு உய்வழி:

'திருமண மக்கள் வாழ்க வாழ்க’ என்று சொல்லி வாழ்த்தினால் போதாது; வாழும் வழி முறைகளைச் சொல்லி வாழ்த்தலே பயனுடைத்து; வழி முறைகளைச் சொன்னால் மட்டும் போதாது; அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தாலே நல் வாழ்வு பெற இயலும். அவ்வாறே, ‘உலக உயிர்கள் உய்க உய்க’ என்று பரிந்துரைத்து வாழ்த் தினால் போதாது. உய்யும் வழி துறைகளைச் சொல்லி வாழ்த்த வேண்டும்; வழி துறைகளைச் சொன்னால் மட் டும் போதாது; அவற்றைக் கடைப்பிடித்தால்தான் உலகு உய்ய முடியும்.

அஃறிணை உயிரிகட்கு நாம் எந்த அறிவுரையும் பரிந்

துரையும் கூறி முன்னேற்ற முடியாது. அவை அன்று தொட்டு இன்று வரை ஒரே மாதிரியாய் இருந்து வருகின்

– 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/18&oldid=544676" இலிருந்து மீள்விக்கப்பட்டது