பக்கம்:உலகு உய்ய.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

உண்டு. இதனால், அரசியலில் உள்ள அனைவருமே கய வர்கள் என்பது பொருளன்று; அவ்வாறு கூறுவது பொறுப் பற்ற அறியாமைப் பேச்சாகும். சகட்டு மேனியில், பெர் னாட்ஷா போன்றவர்களின் ஏளனவுரையை வாங்கிக் கட் டிக்கொள்ள வேண்டி வரும் என அஞ்சி எவரும் அரசிய லுக்கு வராதிருப்பின் அரசாட்சி நடப்பது எவ்வாறு? ஒரு சிலராயினும் துணிந்து ஈடுபட்டால்தானே அரசு நடை பெறும்?

நல்ல பொருள்களோடு சில கெட்ட பொருள்களையும் கலப்படம் செய்வதால் நல்ல பொருள்களும் கெட்டு விடு கின்றன. அவ்வாறே அரசியல் கட்சியிலும் கலப்படம் உண்டு. கயவர்கள் சிலர், கட்சிக்குள் புகுந்து கொண்டும் கட்சியைக் கைப்பற்றிக் கொண்டும் கயமைகள் செய்வ தால், கட்சிக்குள் உட்பூசலும், மற்ற கட்சிகளோடு போரும் பூசலும் ஏற்படுகிள்றன. இந்தக் கலப்படக் கய வர்களைக் களைந்து எறிந்துவிடின், நாடுகளில் கட்சி அரசாட்சி நன்முறையில் நடைபெறும். அரசியல் கட் சிக்காரர்கள், தம் கட்சியினருடனும் சரி - எதிர்க்கட்சியின ருடனும் சரி - பெருந்தன்மையுடனும் பரந்த மனப்பான் மிையுடனும் அமைதியான முறையில் செயல்படின், கட்சி யாட்சி முறையில் போருக்கும் பூசலுக்கும் இடமே யிராது சொல்வது எளிது - செயல்பட வேண்டுமே!

எப்படியோ, உலகம் முழுவதும் போரின் சிறிய சுவடும் இல்லாதபடி, வீரயுகம் மாறி அமைதியுகம் ஏற்பட வேண் டும். மக்களினம், வாழ்க்கையை எளிமையாகவும் இன்ப மாகவும் கழிப்பதற்கு, போர் இல்லாத உலகத்தை உரு வாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட

போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.

-பாரதிதாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/182&oldid=544838" இலிருந்து மீள்விக்கப்பட்டது