பக்கம்:உலகு உய்ய.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஒழுங்கு முறை உள்ள உலகம்

1. புறப் பொருள் துறைகள்

மனிதன் அயோக்கியன்

மக்களினம் உய்ய ஊழல் இல்லாத-ஒழுங்கு முறை உள்ள உலகத்தை அமைக்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததாகும். உலகில் உள்ள எல்லாவகை உயிர் இனங்களும் தம்நலம் பாராட்டுபவையே. உயர்திணை எனப்படும் மனிதனும் இதற்கு விதி விலக்கு இல்லை என்பது மட்டு மன்று-மற்ற உயிரிகளினும் மிகுந்த அளவில் தன்னலம் பராட்டுபவன் மனிதன். சுருங்கக் கூறின் 'மனிதன் அயோக்கியன்’ என்று கூறுவது பொருத்த முடைத்தாகும். எங்கோ ஒரு சிலர் இதற்கு விதி விலக்கா யிருக்கலாம். அது பேச்சன்று. பெரும்பாலான மனிதர்கள் அயோக்கியர்களே! இதைப் படிக்கும் பலர் என்மேல் சினம் கொள்ளலாம். அறுபத்தைந்தாம் அகவை நடந்து கொண் டிருக்கிறயான், பல துறை மக்களையும் கூர்ந்து நோக்கி முடிவெடுத்தபட்டறிவு கொண்டே.இவ்வாறு எழுதுகிறேன்.

மக்கள் ஈடுபட்டுள்ள துறைகளுள் எந்தத் துறையில் ஊழல் இல்லை? ஒவ்வொரு துறையிலும் விரல் விட்டு எண்ணும் அளவில் ஒரு சிலரே ஒழுங்குள்ளவரா யிருக்க லாம்; மற்றவர்கள் ஒழுங்கற்றவர்களே. அரசியலார் அனைவரும்-ஆசிரியர்கள் அனைவரும்-அரசியல் அலுவ லாளர் அனைவரும்-மதத்தலைவர்கள் அனைவரும்வணிகர் அனைவரும்-உழவர் அனைவரும்- தொழிலாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/183&oldid=544839" இலிருந்து மீள்விக்கப்பட்டது