பக்கம்:உலகு உய்ய.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

கள் அனைவரும்-முதலாளிகள் அனைவரும்-செல்வர்கள் அனைவரும்-அறிஞர் அனைவரும்-கற்றவர் அனைவரும்கல்லாதவர் அனைவரும்-கடவுள் அன்பர்கள் (பக்தர்கள்) அனைவரும்-எழுத்தாளர்கள் அனைவரும்-சொற்பொழி வாளர்கள் அனைவரும்-என் மக்கள் அனைவரும் ஒழுங் கும் நேர்மையும் உடையவர்களா? இல்லையே! ஒவ்

வொரு துறையிலும் ஊழல்கள் மலிந்துள்ளன.

கையூட்டு (இலஞ்சம்) பெறுதல், ஏமாற்றிப் பிழைத் தல், திருடுதல், கொலை-கொள்ளை புரிதல், கலப்படம்கள்ள வாணிகம்-கள்ளக்கணக்கு-கறுப்புப் பணம்-வரி ஏய்ப்பு-பதுக்கல்-விலையேற்றம்-மட்டமான பொருள் களை உண்டாக்கம் செய்தல்- இன்ன பிறவற்றில் ஈடுபடு தல், கலகம் செய்தல், சரியான கூலி தராமை, ஒழுங்காக உழைக்காமை, பிறர் பெண்ணை விரும்புதல், கற்பழிப்பு, பொய் புரட்டு பேசுதல், மந்திர-மாயம் என்னும் பெய ரால் ஏய்த்தல், பொய்க்கோலம் புனைந்து வஞ்சித்தல்முதலிய ஊழல்கள் உலகில் மலிந்துள்ளமை உண்மை தரனே!

ஊழலை ஒழிக்கும் வழி:

ஊழல்களைப் போக்குவது எப்படி? இளம் பருவத்தி லிருந்தே, தீயன செய்தால், சாமி கண்ணைக் குத்தும் என்று அச்சுறுத்தி வந்தும் பயனில்லை-தீயன தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. கடவுள், மதம், சமய அறிவுரை, நீதி நூல்கள்-இன்ன பிற இருந்தும் தீயன நீங்கியதாகத் தெரியவில்லை. கடவுளுக்கு அஞ்சாவிடினும், சமூகம் பழிக்குமே-சமூகத்தின் ஒத்துழைப்பு கிடைக்காதே என அஞ்சியாவது தீயன செய்தலை மக்கள் நீக்கியதாகவோ நிறுத்தியதாகவோ தெரியவில்லை. கடவுள் இருக்கட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/184&oldid=544840" இலிருந்து மீள்விக்கப்பட்டது