பக்கம்:உலகு உய்ய.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

"கொலையிற் கொடியாரைவேந்தொறுத்தல்பைங்சும் களைகட் டதனொடு நேர்' (550)

என்னும் திருக்குறள் பாடல்களால் தெளியலாம்.

பண்டு தமிழ் நாட்டில், கோவலன்-கண்ணகி என்ற கணவன் மனைவியர், காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மதுரைக்குப் பிழைப்பு தேடிச் சென்றனர். அங்கே, திரு டாத கோவலனைத் திருடன் எனத் தவறாகத் தீர்மானித் துக் கொலை செய்யுமாறு நெடுஞ் செழியன் என்னும் பாண்டிய மன்னன் கட்டளையிட்டதால் கோவலன் கொலையுண்டான். இஃதறிந்த கோவலன் மனைவி கண்ணகி கடுந்துயர் உழந்து, மன்னனிடம் சென்று, ஒரு குற்றமும் அறியாத என் கணவனை எவ்வாறு கொல்ல லாம் என முறை வேண்டினாள். பாண்டிய மன்னன், கண்ணகியை நோக்கி, 'பெண்ணே, திருடனைக் கொல்லு தல் கொடுங்கோலன்று; நேர்மையான செங்கோல் ஆட் சியே யாகும்” எனப் பதில் இறுத்தான். இதனை, இளங் கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் -வழக்குரை காதை யில் உள்ள,

“பெண்ணணங்கே,

கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றங் காண் என”. (93-95)

என்னும் பகுதியால் அறியலாம். பின்னர் மன்னன் தன் தவறு உணர்ந்து மயங்கி வீழ்ந்து விட்டாண்ாம். ஆக, இந் நிகழ்ச்சியைக் கொண்டு, பண்டு திருட்டுக் குற்றத்துக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்பட்டது என்னும் செய்தி தெளிவாகும். திருடன் பெண்டாட்டி கைம்பெண்டாட்டி (விதவை) என்னும் பழமொழியும் அன்று திருடனுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/187&oldid=544843" இலிருந்து மீள்விக்கப்பட்டது