பக்கம்:உலகு உய்ய.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

சமூகக் கட்டுப்பாடு - அரசு ஆணை ஆகிய சூழ்நிலையால், மக்கள் நல்லொழுக்கம் உடையவராக இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பர். இல்லையேல், சமூகத்தின் தண்டனையையும் அரசின் தண்டனையையும் பெற்றாகவேண்டும். சமூகத்தின் தண்டனையினும் அரசின் தண்டனையே, மக்களை நன்னெறியிற் செலுத்தும் ஆற் றல் உடையதாகும்.

இந்தக் கட்டாயக் கட்டுப்பாடு காரணமாக - அரசின் தண்டனைக்கு அஞ்சுதல் காரணமாக - மக்கள் பலர் தொடர்ந்து நன்னெறியில் ஒழுகி வந்தனர். சிலர் மட்டும் இதற்கு விதி விலக்கா யிருந்திருக்கலாம். சமூகம் - அரசு ஆகிய சூழ்நிலையினால், மக்கள் பலரின் உள்ளத்தில் நல் லொழுக்க உணர்வு படிந்து இறுக்கம் பெற்று விட்டது. இத்தகைய நல்லோரின் மரபு, நல்ல மரபு நிலையாக மதிக்கப் பெற்றது; இதற்கு விதிவிலக்காயிருந்து வந்த தீயோரின் மரபு தீய மரபு நிலையாகக் கணிக்கப்பட்டது. அரசு நன்கு கண்காணித்துக் கை - கால்களைக் குறைத் தல், கொலைத் தண்டனை கொடுத்தல் முதலியன செய் திருந்தால், எவ்வகையிலும் சிறிதளவும் தீய மரபு நிலை உருவாவதற்கு இடமிருக்க முடியாது. எனவே, நல்ல மரபு நிலையைத் தீர்மானிப்பது - நல்ல மரபு நிலையை உரு வாக்குவது நல்ல சூழ்நிலையே என்ற இறுதியான முடி வுக்கு வரமுடியும். ஆக இந்தக் காலத்திலும், அரசு கண்டிப்பான சட்ட திட்டங்களின் வாயிலாக - கடுமை யான தண்டனைகளின் வாயிலாக, ஊழல் இல்லாத ஒழுங்கு உள்ள சமுதாயத்தை உருவாக்க முடியும்.

ஊழலும் ஒறுப்பும்:

வறுமையால் திருடுபவர்களையும் மன்னிக்க முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/189&oldid=544845" இலிருந்து மீள்விக்கப்பட்டது